"கோவிஷீல்ட் தடுப்பூசி கால இடைவெளி குறைப்பு"
பதிவு : செப்டம்பர் 06, 2021, 09:49 PM
கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை 28 நாட்களாக குறைத்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் கிட்டெக்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்த அனுமதி கேட்டு கேரள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில்,அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி வாங்கி சேமித்து வைத்திருப்பதாகவும், முதல் டோஸ் செலுத்தப்பட்டதாகவும், ஆனால் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட 84 நாள் இடைவெளி வரை தடுப்பூசியை பாதுகாத்து வைத்திருக்க முடியவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரமாக வெளிநாடு செல்லும் மாணவர்கள் மற்றும் பிற தொழில் வல்லுநர்களுக்கு தற்போது 28 நாட்கள் இடைவெளியில் தடுப்பூசி செலுத்தும் நிலை இருப்பதாக தெரிவித்த நீதிமன்றம், எனவே தடுப்பூசி செலுத்துவதில் நாட்டின் குடிமக்களுக்கு இரண்டு வகையான   நீதி வழங்குவது சரியல்ல என்று நீதிமன்றம் கூறியுள்ளது. குறைந்தபட்சம் தடுப்பூசியை தங்கள் சொந்த செலவில்  செலுத்திக் கொள்பவர்கள் 28 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது டோஸ் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியது. ஆர்வமுள்ளவர்கள் 28 நாட்களுக்குப் பிறகு கோவிஷீல்டின் இரண்டாவது டோஸை எடுத்துக் கொள்ளலாம் என்றும் இருப்பினும், அரசு வழங்கும் இலவச தடுப்பூசிகளுக்கு விலக்கு பொருந்தாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

672 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

453 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

88 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

60 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

59 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

43 views

பிற செய்திகள்

வரி ஏய்ப்பை தடுக்க நடவடிக்கை - ஜிஎஸ்டி தொழில்நுட்ப சீரமைப்பு குழு அமைப்பு

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக அஜித் பவார் தலைமையில் ஜிஎஸ்டி தொழில்நுட்ப சீரமைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

13 views

ராஜஸ்தான் காங்கிரஸில் மீண்டும் குழப்பம்? : டெல்லியில் முகாமிடும் சச்சின் பைலட்

பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் குழப்பமான சூழல் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

15 views

4 நாடுகளின் குவாட் கூட்டமைப்பு... 120 கோடி தடுப்பூசிகளை அளிக்க திட்டம் - இந்தோ பசிபிக் நாடுகளுக்கு அளிக்கப்படும்

குவாட் நாடுகளின் கூட்டமைப்பு 120 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு அளிக்கப் போவதாக அறிவித்துள்ளன. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

10 views

போக்குவரத்து காவலரை தாக்கிய ஓட்டுநர் - இணையத்தில் பரவி வரும் வீடியோ காட்சிகள்

புதுச்சேரியில் போக்குவரத்து காவலரை மதுபோதையில் தாக்கிய ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். கிருமாம்பாக்கம் பகுதியில் வாகனம் ஒன்று கட்டுப்பாடின்றி செல்வதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அதனை தடுத்த நிறுத்தி விசாரித்தனர்.

41 views

"இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும்" - பிரதமர் மோடி

இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும் என ஐ.நா. பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலக தடுப்பூசி நிறுவனங்களை இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

15 views

ஐ.நா. சபையின் 76 ஆவது அமர்வில் பிரதமர் மோடி உரை (தமிழில்)

நியூயார்க் சென்றுள்ள பிரதமர் மோடி ஐநா சபையின் 76 ஆவது அமர்வில் உரையாற்றினார்.

135 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.