பாலியல் பலாத்காரத்தால் கருவுற்ற பெண்; கருக்கலைப்பு செய்ய அனுமதி கேட்டு மனு - அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவு
பதிவு : செப்டம்பர் 06, 2021, 11:41 AM
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதால் கர்ப்பமான பெண் ஒருவர், சட்டப்படி கருக்கலைப்பு செய்ய நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், நீதிபதிகள் அதற்கு அனுமதி அளித்துள்ளனர்.
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதால் கர்ப்பமான பெண் ஒருவர், சட்டப்படி கருக்கலைப்பு செய்ய நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், நீதிபதிகள் அதற்கு அனுமதி அளித்துள்ளனர். அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, இந்த முடிவை எடுக்கும்படி தனக்கு அழுத்தம் தரவில்லை என்று மனுதாரர் தெரிவித்ததால், இது குறித்து உரிய பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசு மருத்துவர்களுக்கு, உத்தரவிட்டது.அதன்பேரில் அறிக்கை தாக்கல் செய்த மருத்துவர்கள், மனுதாரர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கரு அவர் வயிற்றில் வளரும் பட்சத்தில் இருவரும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண் கருவுற்றதன் கராணமாக, அவரது மனம் கடுமையாக பாதிக்கப்படுவதாக சம்பந்தபட்ட சட்டப்பிரிவுகள் கூறுவதால், மனுதாரர் வயிற்றில் வளரும் கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அத்துடன், மனுதாரர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கருக்கலைப்பு செய்யப்பட வேண்டும் என்றும், அவர் பூரண குணமடையும் வரை அங்கேயே இருந்து சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கருவின் மாதிரிகளை எடுத்து, டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்கு விசாரணைக்கு ஆதாரமாக பயன்படுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது


தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

55 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

50 views

பிற செய்திகள்

3 ஆயிரம் கிலோ ஹெராயின் கடத்தல் - விசாரணையை தொடங்கியது தமிழக காவல்துறை

குஜராத்தில் 3000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்த விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையை துவக்கியுள்ளது.

11 views

நாளை டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர் - பொறுப்பேற்ற பின் முதன்முறையாக பயணம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நாளை டெல்லி செல்ல உள்ளார்.

11 views

"டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும்" - ஓபிஎஸ்

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

31 views

"அனைத்து மொழிகளிலும் சுற்றுசூழல் மதிப்பீடு அறிக்கை" - தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரணை

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை அனைத்து பிராந்திய மொழிகளிலும் வரும் அக்டோபர் 21- ம் தேதிக்குள் வெளியிடப்படும் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

20 views

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் - வரும் 25ம் தேதி கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் தொடங்க உள்ளதாக தகவல்

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது.

10 views

ஒரு யானையை கண்காணிக்க 30 பேர் - இவ்வளவு பாதுகாப்பு வழங்க காரணம் என்ன ?

மூன்று கும்கி யானைகளுடன், 30 வனத்துறையினரின் கண்காணிப்பில் ராஜ தோரணையில் வலம் வருகிறது, ரிவால்டோ யானை... ஒரு யானைக்கு இவ்வளவு பாதுகாப்பு வழங்க என்ன காரணம் என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.