செப்.20-ல் பாஜக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - திமுக கூட்டணி கட்சிகள் கூட்டறிக்கை
பதிவு : செப்டம்பர் 05, 2021, 10:05 PM
வருகிற 20ஆம் தேதி மத்திய பாஜக அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
வருகிற 20ஆம் தேதி மத்திய பாஜக அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் காணொலி மூலம் கூட்டம் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்வது, தனியார் மயமாக்கல் உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து செப்டம்பர் 20 முதல் 30ஆம் தேதி வரை, பல்வேறு போராட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதன் படி, திமுக தலைமையிலான கூட்டணி கட்சி சார்பில், வருகிற 20 ஆம் தேதி காலை 10 மணிஅளவில், தங்களின் இல்லம் முன்பு கருப்பு கொடி ஏந்தி கண்டன போராட்டம் நடத்த திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை ஆகிய கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.  

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

417 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

40 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

26 views

பிற செய்திகள்

தற்கொலை வேண்டாம் - சூர்யா அறிவுரை

தேர்வு பயத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்...

10 views

வரும் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டி என தகவல்

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

27 views

264 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது - தனிப்படை போலீசார் அதிரடி

திருச்செந்தூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

9 views

ஆற்றின் மையப்பகுதியில் சிக்கிய இளைஞர் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்

பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் ஆற்றின் நடுவில் சிக்கிய இளைஞரை 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

8 views

விவசாயி ஓட ஓட வெட்டிக்கொலை - சொத்திற்காக கொலை அரங்கேறியதா..? என விசாரணை

கிருஷ்ணகிரி அருகே விவசாயி ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 views

கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையர்கள் - ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை

வேதாரண்யம் மீனவர்களை இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி பொருட்களை கொள்ளையடித்தனர்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.