"அரசு ஆவணங்களில் தாயார் பெயர்" - தலைமை நீதிபதி அமர்வில் திங்கட்கிழமை விசாரணை
பதிவு : செப்டம்பர் 05, 2021, 07:47 AM
அரசு துறைகளில் அனைத்து விண்ணப்பங்கள், சான்றிதழ், உரிமம் மற்றும் ஆவணங்களில் தாயின் பெயரை குறிப்பிடும் வகையில் தனி பிரிவை ஏற்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரசு துறைகளில் அனைத்து விண்ணப்பங்கள், சான்றிதழ், உரிமம் மற்றும் ஆவணங்களில் தாயின் பெயரை குறிப்பிடும் வகையில் தனி பிரிவை ஏற்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், திருமணம், பூப்புனித நீராட்டு விழா உள்ளிட்ட அழைப்பிதழ்களில் தாய், தந்தையின் பெயரை குறிப்பிடும் நிலையில், அரசு ஆவணங்கள், கல்வி ஆவணங்கள், இருப்பிட சான்று மற்றும் சாதி சான்று விண்ணப்பங்களில் தந்தை பெயர் மட்டுமே குறிப்பிடப்படுவதாக சுட்டிக்காட்டி உள்ளார்.இந்திய அரசியல் சட்டம், ஆண்- பெண் இருபாலருக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களில் தாயாரின் பெயர்கள் கேட்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.தாய்நாடு, தாய்மொழி என்றும் நதியை பெண்களின் பெயரில் அழைக்கும் சூழலில் அனைத்து அரசு துறை ஆவணங்கள், விண்ணப்பங்கள், சான்றிதழ்களில் தாய் பெயரை குறிப்பிடும் வகையில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.
 


 
 


தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

453 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

60 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

59 views

பிற செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

14 views

வணிகம் மற்றும் வர்த்தக வார நிறைவு விழா - மத்திய அமைச்சர் எல். முருகன் பங்கேற்பு

நாட்டின் மொத்த வேளாண் ஏற்றுமதியில், கடல்சார் ஏற்றுமதி 18 சதவீதம் என்றும், கடல் சார்ந்த ஏற்றுமதிக்கு, 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

20 views

இரண்டு கிட்னிகள் செயலிழந்த சிறுமி - தைரியமாக இருக்குமாறு முதல்வர் ஆறுதல்

இரண்டு கிட்னிகள் செயலிழந்த சேலத்தை சேர்ந்த சிறுமியிடம் தொலைபேசி முதலமைச்சர் ஸ்டாலின், ஆறுதல் தெரிவித்தார். சிகிச்சை அளிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

79 views

"தலைவர்களோடு இணைத்து விஜய் படங்கள்"; "இது போன்ற செயலில் ஈடுபடக் கூடாது" - விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் எச்சரிக்கை

தலைவர்களோடு, விஜய்யின் படங்களை இணைத்தும், தேவையில்லாத வார்த்தைகளை பிரயோகித்தும், இனிமேல் போஸ்டர்கள் வெளியிடக்கூடாது என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

12 views

நாகை தேவபுரீஸ்வரர் கோயிலில் 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

நாகை அருகே உள்ள குலோத்துங்க சோழர் கால கோயிலில் பூமிக்குள் புதைந்திருந்த 17 ஐம்பொன் சாமி சிலைகள் உள்பட 47 ஐம்பொன் பூஜை பொருட்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

23 views

கூட்டுறவு வங்கி நகைக்கடன் முறைகேடு - பொது நகை கடன்களை ஆய்வு செய்ய உத்தரவு

கூட்டுறவு வங்கி நகைக்கடன் முறைகேடு விவகாரத்தில் 5 சவரன் மட்டுமல்லாமல் வங்கிகளில் பெறப்பட்ட 100 சதவீதம் பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு குழுவை அமைத்ததுள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.