தற்கொலை முயற்சியில் உயிரிழந்த காதலன்.. தற்கொலைக்கு முன்பாக வீடியோ.. தற்கொலைக்கு விருப்பமில்லாத காதலி
பதிவு : செப்டம்பர் 05, 2021, 03:32 AM
தற்கொலை முயற்சியில் உயிரிழந்த காதலன்.. தற்கொலைக்கு முன்பாக வீடியோ.. தற்கொலைக்கு விருப்பமில்லாத காதலி
தற்கொலை முயற்சியில் உயிரிழந்த காதலன்.. தற்கொலைக்கு முன்பாக வீடியோ.. தற்கொலைக்கு விருப்பமில்லாத காதலி 


 கேரளாவில் தற்கொலை முடிவெடுத்த காதல் ஜோடிகள் மலை மீது இருந்து கீழே குதித்ததில் காதலன் உயிரிழந்தார். ஆனால் உயிர் பிழைத்த காதலியின் வாக்குமூலம் போலீசாரை அதிர வைத்திருக்கிறது... இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? இப்போது பார்க்கலாம்...

தற்கொலை முடிவெடுக்கும் இந்த காட்சியில் காதலி உயிரிழந்து போக, காதலன் மரக்கிளையில் தொங்கி உயிர் பிழைப்பார். ஆனால் இதைப் போன்ற ஒரு சம்பவம் கேரளாவில் அரங்கேறி இருக்கிறது. ஆனால் இதில் காதலன் உயிரிழந்து போக, உயிர் பிழைத்த காதலி சிகிச்சையில் இருக்கிறார்.கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள மரயூர் பகுதியை சேர்ந்தவர் நிகிலா. ஆசிரியையாக வேலை பார்தது வருகிறார். இவர் பெரும்பாவூர் பகுதியை சேர்ந்த நாதிர்ஷா என்பவரை காதலித்து வந்துள்ளனர்.இவர்களின் காதலுக்கு இரு தரப்பும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் காதல் ஜோடிகள் 2 பேரும் தற்கொலை செய்து  கொள்ள முடிவெடுத்துள்ளனர். பின்னர் மரயூர் பகுதியில் உள்ள மலைப்பகுதிக்கு இருவரும் காரில் வந்துள்ளனர்.மலை உச்சியில் உள்ள பாறையில் இருந்து கீழே குதித்து தற்கொலை கொள்ள வேண்டும் என திட்டமிட்டு கடந்த வியாழக்கிழமை வந்துள்ளனர். அப்போது காரின் உள்ளே இருந்த படி தற்கொலை முடிவு குறித்து வீடியோ ஒன்றை எடுத்துள்ளனர்.ஆனால் ஆரம்பத்தில் இருந்தே தற்கொலை முடிவிற்கு உடன்படாத நிகிலா, காதலன் எடுத்த வீடியோவை அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். அதேநேரம் அந்த வீடியோவில் நிகிலாவின் உடல்மொழியும் அதை உறுதி  செய்கிறது.பாறையில் இருந்து குதிப்பதற்கு முன்பாக கை நரம்புகளை துண்டித்துக் கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார் நாதிர்ஷா. இதற்கு நிகிலா உடன்படாத நிலையில் வலுக்கட்டாயமாக நிகிலாவின் கையை நாதிர்ஷா அறுக்க முயன்றுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தன் கை நரம்பை துண்டித்துக் கொண்டு நாதிர்ஷா பாறையில் இருந்து குதித்து உயிரை விட்டுள்ளார்.கையில் காயங்களுடன் தப்பிய நிகிலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே தற்கொலையில் தனக்கு விருப்பமில்லை என்றும் தன் காதலன் தன்னை கொல்ல முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.தற்கொலைக்கு முன்பாக நகைகளை எல்லாம் காரில் வைத்து விட்டு வருமாறு நாதிர்ஷா தன்னிடம் சொன்னதாகவும் கூறியிருக்கிறார் நிகிலா. இவரின் வாக்குமூலம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நாதிர்ஷாவின் மரணம் தற்கொலை தானா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.உயிரிழந்த காதலனின் சடலத்தை கைப்பற்றிய  போலீசார் நிகிலாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

664 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

85 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

58 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

54 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

41 views

பிற செய்திகள்

மனநலன் பாதிக்கப்பட்ட தந்தை வெறிச்செயல்: மனைவி, குழந்தையை கத்தியால் குத்திய கணவர்

கேரளா மாநிலம் கண்ணூரில் இளைஞர் ஒருவர் தனது 9 மாத குழந்தை மற்றும் மனைவியை கத்தியால் சரமாரியாக தாக்கி விட்டு அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

8 views

மகாநதி ஆற்றில் சிக்கிய யானை: மீட்க சென்ற போது படகு கவிழ்ந்து பத்திரிகையாளர் உயிரிழந்த பரிதாபம்

ஒடிசா மாநிலத்தில் உள்ள மகாநதி ஆற்றில் சிக்கிய யானையை மீட்க சென்ற போது, படகு கவிழ்ந்து, பத்திரிகையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

110 views

கோட்டயம் மாவட்ட திடநாடு பஞ்சாயத்து: இலவச கல்யாண தரகு சேவையை தொடங்கியது

கேரளாவில், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள திடநாடு பஞ்சாயத்து நிர்வாகம், இலவச கல்யாண தரகு சேவையை தொடங்கியுள்ளது.

40 views

நடப்பு நிதியாண்டில் மொத்த நேரடி வரி வசூல் 47% வளர்ச்சி - மத்திய நிதி அமைச்சகம்

நடப்பு நிதி ஆண்டில் மொத்த நேரடி வரி வசூல் 47% வளர்ச்சி என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

12 views

இந்தியாவுக்கு வருமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

இந்தியாவுக்கு வருமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

9 views

இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம் - பைடன்

வாஷிங்டனில் இந்திய பிரதமர் மற்றும் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையிலான சந்திப்பில் ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானின் செயல்பாடு குறித்து கவலை தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.