பார்மலின் கலந்த மீன்கள் விற்பனை என புகார் - மீண்டும் வலுத்துள்ள பார்மலின் சர்ச்சை
பதிவு : செப்டம்பர் 04, 2021, 05:21 PM
மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் ரசாயனம் கலக்கப்படுவதாக மீண்டும் புகார் எழுந்துள்ளது. இதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம்...
அசைவ பிரியர்களின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ள உணவு, மீன்...
கடலில் பிடிக்கப்படும் மீன்கள் விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற ரசாயனம் கலக்கப்படுவதாக மீண்டும் புகார்கள் வலுத்துள்ளன..சுமார் 2 வாரங்களுக்கு மேல் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக இந்த ரசாயனம் கலக்கப்படுவதாக கூறப்படுகிறது. சென்னையில் பெருமளவில் ரசாயனம் சேர்த்த மீன்கள் விற்கப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து, காசிமேடு, நொச்சிக்குப்பம், சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.இதில் சிந்தாதிரிப்பேட்டையில் 150 கிலோ கெட்டுப்போன மீன்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.ரசாயனம் கலந்த மீன்களால் புற்றுநோய் அபாயம் இருப்பதாக தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டும், சிலர் பொருட்படுத்தாமல் ரசாயனம் கலந்த மீன்களை விற்பதாக கூறும் அதிகாரிகள், இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.ரசாயனம் கலந்த மீன்களை கண்டறிய புதிய கருவி இருப்பதாகவும், அதனை மக்களும் பயன்படுத்தலாம் என மீன்வளத்துறை அதிகாரி கூறியுள்ளார்.மீன்கள் தரம் குறித்து புகார் எழும் பட்சத்தில் 94440 42322 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது
மீண்டும் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பதாக புகார் எழுந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

55 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

53 views

பிற செய்திகள்

"நீதிமன்றம் ஒரு கோவிலை போன்றது " - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து

நீதிமன்றம் ஒரு கோவிலை போன்றது என்றும் இதனால் நியாயமாக நடக்க வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

13 views

ரிவால்டோ யானை விவகாரம் - வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

காட்டில் விடப்பட்டுள்ள ரிவால்டோ யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து,வீடியோ பதிவு தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 views

கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை - பட்டப்பகலில் நடந்த பயங்கரம்

சென்னையில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

26 views

போட்டித்தேர்வு வயது வரம்பு தளர்வு - அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை

நேரடி போட்டி தேர்வுகளுக்கு இரண்டு ஆண்டுகள் வயது வரம்பு தளர்வை முதுகலை ஆசிரியர் தேர்வுக்கும் அமல்படுத்த வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

14 views

மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைப்பு - தமிழ்நாடு அரசு உத்தரவு

தலைமைச் செயலர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

8 views

குழந்தையை அடித்து துன்புறுத்தும் நபர் - பார்ப்போரை பதற வைக்கும் காட்சிகள்

குழந்தையை கையாலும் கயிறாலும் ஒருவர் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது..

63 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.