"விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை ஏன்?" - அமைச்சர் சேகர்பாபு
பதிவு : செப்டம்பர் 04, 2021, 01:59 PM
ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார்.
ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார். சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் காந்தி, அனைத்து சாதியினர் அர்ச்சகராகும் திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்தார். பின்னர், தமிழ்நாட்டில் விநாயகர் சதூர்த்தி விழாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, ஒன்றிய அரசின் உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என குறிப்பிட்டிருப்பதையும் அமைச்சர் சேகர்பாபு சுட்டிக்காட்டி பேசினார். எனவே ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையிலே தமிழ்நாட்டில் விநாயகர் சதூர்த்தி உள்ளிட்ட திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார். Card-8 மேலும், வரும் முன் காப்போம் என்ற வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர் சேகர்பாபு, பிரார்த்தனை செய்ய இடையூறு இன்றி தமிழக அரசு செயல்பட்டு வருவதாக கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

58 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

54 views

பிற செய்திகள்

எஸ்.பி.பி-யின் முதலாமாண்டு நினைவு தினம்: நினைவிடம் லிங்க வடிவில் பூக்களால் அலங்கரிப்பு

மறைந்த பாடகர் எஸ்.பி.பால சுப்பிரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

12 views

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதல்: கடலுக்கு சென்ற மீனவருக்கு வெட்டுக்காயம்

நாகையில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் வெட்டுக்காயமடைந்த மீனவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

8 views

தீப்பிடித்து எரிந்த இரு சக்கர வாகனம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டி

புதுக்கோட்டை அருகே சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

41 views

"மக்கள் நம்பிக்கையை இம்மி பிசகாமல் காப்பாற்றி வருகிறோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேர்தல் அறிக்கையில் சொல்லாத வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றி இருப்பதாகவும், மக்களின் நம்பிக்கையை இம்மி பிசகாமல் அரசு காப்பாற்றி வருவதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார்.

10 views

"4 மாதங்களில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் 202 வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றி இருப்பதாகவும், 3 மாதங்களுக்கு ஒருமுறை நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து மக்களுக்கு விளக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

11 views

8-ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை - சமையல் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

மனவளச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.