கடல் அலையில் சிக்கி பறிபோகும் உயிர்கள் - 10 நாட்களில் 6 பேர் பலி
பதிவு : செப்டம்பர் 04, 2021, 01:42 PM
கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அரசு அனுமதித்த இந்த 10 நாட்களில், அலையில் சிக்கி சென்னையில் மட்டுமே 6 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தடுத்து நிகழும் உயிரிழப்புகள் குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்...
கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அரசு அனுமதித்த இந்த 10 நாட்களில், அலையில் சிக்கி சென்னையில் மட்டுமே 6 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தடுத்து நிகழும் உயிரிழப்புகள் குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்... 

சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 7 பள்ளி மாணவர்கள், மெரினா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தனர். 

அப்போது, திடீரென வீசிய ராட்சத அலையில் சிக்கிய நான்கு மாணவர்கள் உயிருக்குப் போராடியுள்ளனர். இதைப் பார்த்த மீனவர் ஒருவர், மூன்று மாணவர்களை பத்திரமாக மீட்டுள்ளார். 

இருப்பினும், அக்பர் அலி என்பவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். தகவலறிந்து உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் கடலோர காவல் படையினர் மாயமான அக்பர் அலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

உயிருடன் மீட்கப்பட்ட மூன்று மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளின் மூலம், கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் கடற்கரைகளுக்கு செல்ல தமிழக அரசு அனுமதித்தது.

அன்றைய தினமே, சென்னை மெரினா கடற்கரையில் குளித்த
3 பள்ளி மாணவர்கள் கடலுக்குள் மாயமாகினர். அவர்களது உடல் இதுவரை மீட்கப்படவில்லை.

இதேபோல், ஆகஸ்ட் 28 ஆம் தேதி திருவான்மியூர் கடற்கரையில் மேத்யூ என்பவரும், வியாழக்கிழமை பெசன்ட் நகர் கடற்கரையில் சுஷாந்த் என்பவரும் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

ஊரடங்கு தளர்வுகள் அறிவித்த பத்தே நாட்களில், சென்னை கடற்கரைகளில் அலையில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

659 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

80 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

55 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

50 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

38 views

பிற செய்திகள்

3 ஆயிரம் கிலோ ஹெராயின் கடத்தல் - விசாரணையை தொடங்கியது தமிழக காவல்துறை

குஜராத்தில் 3000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்த விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையை துவக்கியுள்ளது.

7 views

நாளை டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர் - பொறுப்பேற்ற பின் முதன்முறையாக பயணம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நாளை டெல்லி செல்ல உள்ளார்.

7 views

"டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும்" - ஓபிஎஸ்

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

28 views

"அனைத்து மொழிகளிலும் சுற்றுசூழல் மதிப்பீடு அறிக்கை" - தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரணை

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை அனைத்து பிராந்திய மொழிகளிலும் வரும் அக்டோபர் 21- ம் தேதிக்குள் வெளியிடப்படும் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

19 views

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் - வரும் 25ம் தேதி கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் தொடங்க உள்ளதாக தகவல்

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது.

10 views

ஒரு யானையை கண்காணிக்க 30 பேர் - இவ்வளவு பாதுகாப்பு வழங்க காரணம் என்ன ?

மூன்று கும்கி யானைகளுடன், 30 வனத்துறையினரின் கண்காணிப்பில் ராஜ தோரணையில் வலம் வருகிறது, ரிவால்டோ யானை... ஒரு யானைக்கு இவ்வளவு பாதுகாப்பு வழங்க என்ன காரணம் என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.