மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்ற இளைஞர் - காதல் விவகாரத்தில் நடந்த பயங்கர​ம்
பதிவு : ஜூலை 31, 2021, 10:16 AM
கேரளாவில் காதல் விவகாரத்தில் பல் மருத்துவ கல்லூரி மாணவியை கொடூரமாக சுட்டுக் கொன்ற இளைஞர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்....
கேரளாவில் காதல் விவகாரத்தில் பல் மருத்துவ கல்லூரி மாணவியை கொடூரமாக சுட்டுக் கொன்ற இளைஞர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.... நடந்தது என்ன என்பதை விவரிக்கிறது, இந்த தொகுப்பு.கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் மானசா மாதவன். 24 வயதான இவர், கொச்சி அருகே கொத்தமங்கலத்தில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று தன் கல்லூரி அருகே உள்ள விடுதியில் நண்பர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ராஹில் என்ற இளைஞர், மானசாவை வலுக்கட்டாயமாக அங்குள்ள ஒரு அறைக்கு அழைத்துச் சென்று தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார்.  இதில் மானசாவின் வலது காது, மற்றும் நெஞ்சில் குண்டுகள் பாய்ந்தன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மானசா செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனிடையே அவரை சுட்டுக் கொன்ற ராஹிலும் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். 32 வயதான ராஹில் ஆர்கிடெக்சராக வேலை பார்த்து வந்தார். இவரும் கண்ணூரை சேர்ந்தவர். ராஹிலும், மானசாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ராஹிலின் நடவடிக்கை பிடிக்காததால் மானசா அவரை விட்டு விலகியதாக தெரிகிறது. இதனால் மானசா மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார் ராஹில். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

442 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

50 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

43 views

பிற செய்திகள்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - ஜி.டி.பியில் 9.2 % பங்களிக்கும் சுற்றுலா துறை

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - ஜி.டி.பியில் 9.2 % பங்களிக்கும் சுற்றுலா துறை

10 views

"சித்து, சன்னி இருவருமே கட்சியின் முகம்" - காங். செய்தி தொடர்பாளர் ரந்திப் சுர்ஜேவாலா பேட்டி

"சித்து, சன்னி இருவருமே கட்சியின் முகம்" - காங். செய்தி தொடர்பாளர் ரந்திப் சுர்ஜேவாலா பேட்டி

7 views

கேரளாவில் அமைச்சர்களுக்கு பயிற்சி - முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைப்பு

கேரளாவில் புதிய அமைச்சர்களுக்கான பயிற்சி முகாமை, முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.

12 views

கொரோனா தடுப்பூசி : டாப் 11 மாநிலங்கள்

தடுப்பூசி செலுத்துவதில் முதல் 11 இடங்களில் உள்ள மாநிலங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

18 views

பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி: பதவிப் பிரமாணம் செய்து வைத்த பன்வாரிலால்

பஞ்சாப் மாநில 17-வது முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி, பதவியேற்றுக் கொண்டார்.

23 views

தூக்கி எறியும் தேங்காய் ஓட்டில் அழகிய மயில் - கைவினைப் பொருளில் சாதிக்கும் பட்டதாரி

ஒடிசா அருகே தேவையில்லை என தூக்கி எரியும் தேங்காய் ஓட்டில், வீட்டை அலங்கரிக்கும் அழகிய பொருட்களை செய்து லட்சகணக்கில் பணம் ஈட்டி வருகிறார் எம்.பி.ஏ. பட்டதாரியான தேவி பிரசாத் தாஸ்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.