"மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்து"
பதிவு : ஜூலை 22, 2021, 05:41 PM
மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகள் இன்றி புதிய பேருந்து கொள்முதல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
"மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்து" 

மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகள் இன்றி புதிய பேருந்து கொள்முதல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரினார்.தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி,  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்விலான விசாரணையில், 10 சதவீத பேருந்துகள் மட்டும் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக கூறினார்.சாலைகளை மேம்படுத்திய பின், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பேருந்து கொள்முதல் செய்யப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில்,10 சதவீத பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், இந்தியா ஏழை நாடு என்றும், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விளக்கமளித்தது. இதைக் கேட்ட நீதிபதிகள், ஆட்சியாளர்கள் ஏழைகளா?, எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஏழைகள் என வினவினர்.2016-ல் இயற்றிய சட்டப்படி, மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய தடை விதித்த நீதிபதிகள், விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

180 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

159 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

99 views

பிற செய்திகள்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை விரைவில் முதல்வர் துவக்கி வைப்பார் - அமைச்சர் தங்கம் தென்னரசு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்காக பெரும்பாக்கத்தில் தனி கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும், விரைவில் முதல்வர் துவங்கி வைப்பார் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

10 views

ஜெயங்கொண்டம் மாளிகைமேடு அகழ்வாராய்ச்சி - அரண்மனை சுவர், வாய்க்கால் கண்டுபிடிப்பு

ஜெயங்கொண்டம் அருகே மாளிகை மேடு அகழ்வாராய்ச்சியில் பிரம்மாண்டமான அரண்மனை சுவர், செங்கற்களால் ஆன நீர்போக்கி வாய்க்கால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

12 views

"ஜெ.பல்கலை இயங்க கூடாது என நினைக்கின்றனர்"; நிதி இல்லை என கூறுவது சரியில்லை - எடப்பாடி பழனிசாமி

விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைகழகம் இயங்க கூடாது என்பதற்காகவே அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படுவதாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

8 views

"சுற்றுச்சூழல் அனுமதி வெளிப்படையாக வழங்குக" - முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

தொழில்துறையினருக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என, முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

10 views

வணிக வளாகத்தின் 3-வது மாடியில் தீ.. நீண்ட போராட்டத்திற்கு பின், தீ அணைப்பு

வணிக வளாகத்தின் 3-வது மாடியில் தீ.. நீண்ட போராட்டத்திற்கு பின், தீ அணைப்பு

18 views

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு - கருப்பு பூஞ்சைக்கு 4,072 பேர் பாதிப்பு

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து தமிழகத்தில் அதிகப்படியானோருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.