தைவான் மீது உரிமை கோரும் சீனா - தைவானுக்கு ஆதரவு அளிக்கும் ஜப்பான்
பதிவு : ஜூலை 22, 2021, 01:46 PM
தைவானுடனான மோதல்களில், ஜப்பான் தலையிட்டால், பிறகு ஜப்பான் மீது அணு குண்டுகளை வீசுவோம் என்று சீனா மிரட்டியுள்ளது. இதைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
தைவானுடனான மோதல்களில், ஜப்பான் தலையிட்டால், பிறகு ஜப்பான் மீது அணு குண்டுகளை வீசுவோம் என்று சீனா மிரட்டியுள்ளது. இதைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். சீனாவின் அருகே உள்ள சிறிய தீவு நாடான தைவான், 1949 வரை சீனாவின் ஒரு அங்கமாக இருந்தது. 1949இல் சீனாவில் கம்யூனிச ஆட்சி ஏற்பட்ட பின், தைவான் தனி நாடாக பிரிந்து, முதலாளித்துவ பாதையில் சென்று, வளர்ந்த நாடாக மாறியது. 1950களில் தைவானை சீனா ஆக்கிரமிக்க முயன்ற போது, அமெரிக்கா தனது கடற்படையை அனுப்பி, அதை தடுத்து நிறுத்தியது. இதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக அமெரிக்க  ராணுவம், தைவானில் நிலை நிறுத்தப்பட்டு, சீனாவின் அச்சுறுத்தல்களில் இருந்து தைவானை 1979 வரை பாதுகாத்தது.தைவான், சீனா, ஜப்பான், அணு குண்டுகள், சீன ராணுவம், போர் கப்பல்கள், அமெரிக்க படைகள்சமீபத்திய வருடங்களில் சீனாவின் ராணுவ பலம் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், தைவானை ஆக்கிரமிக்க போவதாக சீனா மிரட்டி வருகிறது. இதைத் தடுக்க, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் நாடுகளின் கடற்படைகள் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தைவான் பிரச்சனையில் ஜப்பான் தொடர்ந்து தலையிட்டால், ஜப்பான் மீது அணு குண்டுகள் வீசி, அதை அடிபணியச் செய்வோம் என்று சீன அதிகாரி ஒருவர் பேசும் காணொளி ஒன்று சீன அரசின் அதிகாரபூர்வ தொலைக் காட்சியில் வெளியானது. பின்னர் சீனாவின் சமூக வலைதளம் ஒன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதை 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.இந்த காணொளிக்கு ஏற்பட்ட எதிர்வினைகள், கண்டனங்களின் விளைவாக, இதை அந்த வலை தளத்தில் இருந்து சீனா அகற்றி விட்டது.  ஆனால் அதற்கு முன்பாக அதை பலரும் பிரதியெடுத்து, 
யு டியுப், டிவிட்டர் தளங்களில் வெளியிட்டுள்ளனர்.ஆனால் தைவான் மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருவது தொடர்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

171 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

157 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

96 views

பிற செய்திகள்

விண்வெளி சுற்றுலா திட்டம் - பில்லியனர்கள் சென்ற தூரம் எவ்வளவு?

விண்வெளி சுற்றுலா திட்ட போட்டியிலிருக்கும் பில்லியனர்கள் விண்ணில் சென்றுவந்த தூரம் எவ்வளது... விண்வெளியில் விமானங்கள் எதுவரையில் பறக்கலாம்...? எதுவரையில் ஏவுகணைகள் பறக்கலாம்...?

21 views

நிறவெறிக்கு எதிரான இனம் கடந்த போராட்டம் - போராட்டத்தில் இடம்பெற்ற ஒட்டுப் பலகைகள்

அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கிடைத்த ஒட்டுப் பலகைகளைக் கொண்டு சிற்பங்கள் செய்யப்பட்டுள்ளன.

5 views

இளவரசர் ஜார்ஜின் 8வது பிறந்த நாள் - வில்லியம்-கேத் தம்பதியின் மூத்த மகன்

இங்கிலாந்து இளவரசர் ஜார்ஜின் 8வது பிறந்த நாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

9 views

பெகாசஸ் செயலியை வாங்கியது யார்? - உள்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சம்மன்

ராகுல்காந்தி உள்பட 300 பேரின் செல்போன் அழைப்புகளை ஒட்டுக்கேட்ட விவகாரத்தில், துறை சார்ந்த மத்திய அரசு அதிகாரிகள் பதிலளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

22 views

கொட்டித் தீர்த்த கனமழை - சீனாவைப் புரட்டிப் போட்ட வெள்ளம்

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்து வரும் கனம்ழை காரணமாக இதுவரை குறைந்த பட்சம் 25 பேராவது உயிரிழந்திருக்கலாம் என்று அம்மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

21 views

ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலாவுக்கு அனுமதி - இலங்கை அரசு அறிவிப்பு

இலங்கையில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.