தேர்தலில் போட்டியிட்ட திருநங்கை மரணம் - தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்த சோகம்
பதிவு : ஜூலை 22, 2021, 01:03 PM
கேரள சட்டமன்றத் தோ்தலில் போட்டியிட்ட பிரபல திருநங்கை திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள சட்டமன்றத் தோ்தலில் போட்டியிட்ட பிரபல திருநங்கை திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.12ஆம் வகுப்புடன் கல்வியை கைவிட்ட கொல்லத்தைச் சோ்ந்த திருநங்கை அனன்யாகுமாரி, வானொலி தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளா், மேடை நிகழ்ச்சி தொகுப்பாளா் என பண்முகம் கொண்டு உயர்ந்துள்ளார். அண்மையில் நடந்த சட்டமன்றத் தோ்தலில் ஜனநாயக சமூக நீதிக் கட்சி சார்பில் போட்டியிட்டார். இதனிடையே, எா்ணாகுளத்தில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த செவ்வாய் அன்று மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இதனிடையே, அவர் கடந்த ஆண்டு பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதாகவும், அதன் பின்னர், கடுமையான உடல் வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறிய நண்பர்கள், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறினர். தவறான சிகிச்சையால் அனன்யா பலியானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மருத்துவ இயக்குநர் விசாரிக்குமாறு அமைச்சா் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். பாலின மாற்று அறுவை சிகிச்சை குறித்த தகவல்களை தனியார் மருத்துவமனை குழு சேகரிக்க உள்ளது. அனன்யா மரணத்துக்கு நீதி வேண்டும் என திருநங்கைகள் உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

311 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

247 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

151 views

பிற செய்திகள்

நிலச்சரிவில் சிக்கிய 73 பேர் சடலங்கள் மீட்பு - கடலோர மாவட்டங்களில் பெரும் சேதம்

கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வரும் தென்மேற்கு பருவமழையால் மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

8 views

சபரிமலையில் மேல்சாந்தி பதவி : "சாதி வேறுபாடின்றி பரிசீலிக்க வேண்டும்" - பி.டி.ஜே.எஸ் கட்சி கோரிக்கை

சபரிமலை கோயிலில் சாதி வேறுபாடின்றி, மேல்சாந்தி பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் என்று பி.டி.ஜே.எஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

9 views

இமாச்சலபிரதேசத்தில் நிலச்சரிவு - வீடுகள் மீது விழுந்த பாறைகள்

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெரிய அளவிலான நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

13 views

சமாஜ்வாடி- ஓவைசி கட்சி கூட்டணி விவகாரம் : முஸ்லிமுக்கு துணைமுதல்வர் பதவி கேட்கவில்லை - மஜ்லிஸ் கட்சி

இஸ்லாமியரை துணை முதல்வராக்குவதாக உறுதியளித்தால், சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைப்பதாக வெளியாகும் செய்தி தவறானது என, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி தெரிவித்துள்ளது.

14 views

நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துக்கள் உயிரிழப்பு.. பறவை காய்ச்சலா? என சந்தேகம்

நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துக்கள் உயிரிழப்பு.. பறவை காய்ச்சலா? என சந்தேகம்

12 views

"கர்நாடகாவில் நல்ல முறையில் ஆட்சி செய்கிறார்" - எடியூரப்பா குறித்து, ஜே.பி. நட்டா கருத்து

"கர்நாடகாவில் நல்ல முறையில் ஆட்சி செய்கிறார்" - எடியூரப்பா குறித்து, ஜே.பி. நட்டா கருத்து

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.