பெகாசஸ் செயலியை வாங்கியது யார்? - உள்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சம்மன்
பதிவு : ஜூலை 22, 2021, 12:05 PM
ராகுல்காந்தி உள்பட 300 பேரின் செல்போன் அழைப்புகளை ஒட்டுக்கேட்ட விவகாரத்தில், துறை சார்ந்த மத்திய அரசு அதிகாரிகள் பதிலளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ராகுல்காந்தி உள்பட 300 பேரின் செல்போன் அழைப்புகளை ஒட்டுக்கேட்ட விவகாரத்தில், துறை சார்ந்த மத்திய அரசு அதிகாரிகள் பதிலளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனம் பெகாசஸ் எனும் செயலியை உருவாக்கி உள்ளது. இதன்மூலம், குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகிப்போரின் செல்போன்கள் உளவு பார்க்கப்படும். ஆனால், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்டோரின் செல்போன்களை உளவு பார்த்துள்ளனர். இதுகுறித்து, நாடாளுமன்றத்தில் அமளி எழுந்த நிலையில், அந்தச் செயலியை யார் வாங்கிவந்தது, ஒட்டுகேட்டு உளவு பார்த்தது ஏன் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து, மத்திய உள்துறை, தொலைத் தொடர்புத் துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் பதிலளிக்க, நாடாளுமன்ற நிலைக்கு சம்மன் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்கு, வரும் 28ஆம் தேதி விசாரிக்க உள்ளது. நாட்டு மக்களின் தனியுரிமை குறித்தும் கேள்வி எழுப்ப உள்ளதும் குறிப்பிடத்தக்கது.      

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

252 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

116 views

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை : வடசென்னையில் போதை மாத்திரை விற்பனை ஜரூர் - வடமாநிலம் டூ வடசென்னை தலைவன் கைது

வடசென்னையில் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

86 views

பிற செய்திகள்

ஹாங்காங் சுதந்திரத்திற்கு போராடிய இளைஞர் - இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முதல் முறையாக இளைஞர் ஒருவருக்கு 9 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன...

15 views

வால்ட் டிஸ்னி நிறுவன ஊழியர்களுக்குக் கட்டாய தடுப்பூசி

அமெரிக்காவில் உள்ள வால்ட் டிஸ்னி நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

28 views

புதிய குடும்பத்தினரான குழந்தை நீர்யானை - பூங்காவினர் மகிழ்ச்சியுடன் வரவேற்பு

மெக்சிகோவிலுள்ள உயிரியல் பூங்காவின் புதிய குடும்பத்தினராக குழந்தை நீர்யானையை பூங்காவினர் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

5 views

பிங்க் நிறத்திற்கு மாறிய ஏரிகள் - காரணத்தை ஆராய்ந்து வரும் அதிகாரிகள்

அர்ஜென்டினாவில் உள்ள படகோனியா பகுதியில் இருக்கும் இரண்டு ஏரிகள் பிங்க் நிறத்திற்கு மாறியது.

51 views

கிரீஸை வாட்டி வரும் வெப்ப அலை - தகிக்கும் ஏதென்ஸ் நகரம்

கிரீசில் நிலவி வரும் கடும் வெப்ப அலையில் ஏதென்ஸ் மக்கள் தகித்து வருகின்றனர்.

101 views

தீவிரமாகப் போகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவிப்பு

அமெரிக்காவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாவதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக பைடன் தெரிவித்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.