பறவை காய்ச்சல் - மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
பதிவு : ஜூலை 22, 2021, 07:17 AM
பறவை காய்ச்சல் காரணமாக ஹரியானாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
பறவை காய்ச்சல் காரணமாக ஹரியானாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹரியானாவை சேர்ந்த 11 வயது சிறுவன் பறவைக் காய்ச்சல் காரணமாக கடந்த ஜூலை 12 ம் தேதி உயிரிழந்தார்.இந்தியாவில் மனிதர்களுக்கு ஏற்பட்ட முதல் பறவை காய்ச்சல் தொற்றாக இது கருதப்படுகிறது.இந்நிலையில், சிறுவனுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு  காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா என கடந்த ஜூலை 16ஆம் தேதி முதல் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், அதில் யாருக்கும் தொற்று அறிகுறி தென்படவில்லை என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், சிறுவன் வசித்து வந்த பகுதியை சுற்றியுள்ள 10 கிலோ மீட்டர் அளவுக்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பறவை காய்ச்சல் தொற்று குறித்து விசாரணை நடத்த மாநில சுகாதார துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு மத்திய குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுவனின் மாதிரிகளை சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

158 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

150 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

91 views

பிற செய்திகள்

"இந்தியர்கள் 67.6% பேருக்கு எதிர்ப்பாற்றல்" - செரோ ஆய்வு முடிவு சொல்லும் செய்தி?

கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் கணிசமாக அதிகரித்திருப்பதாக, ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது. கொரோனா பரவல் இதன் மூலம் முடிவுக்கு வருமா? என்பதை அலசுகிறது இந்தத் தொகுப்பு...

7 views

பெகாஸ் செயலி - உளவு வலையில் 14 உலக தலைவர்கள்?

பெகாசஸ் என்ற கைபேசிகளை உளவு பார்க்கும் மென்பொருள் மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வேவு பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம....

72 views

ஆக்சிஜன் ஏற்றுமதி 700% அதிகம்; கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

கொரோனா காலத்தில் ஆக்சிஜன் ஏற்றுமதியை 700 சதவிகிதம் அதிகபடுத்தியதன் காரணமாகவே, கொரோனா பலி எண்ணிக்கை உயர்ந்ததாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

17 views

6 மாத குழந்தைக்கு அரிய வகை நோய் பாதிப்பு - சிகிச்சை பலனின்றி குழந்தை பலியான சோகம்

கேரளாவில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துக்காக காத்திருந்த நிலையில், அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட 6 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

18 views

மும்பையில் தொடரும் கனமழை - மரைன் டிரைவ் பகுதியில் கடல் சீற்றம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

25 views

செல்போன்களை ஹேக் செய்த 15 வயது சிறுவன் கைது

மத்திய பிரதேச மாநிலத்தில் பலரது செல்போன்களை ஹேக் செய்து, தகவல்களை திருடி பிளாக்மெயில் செய்து பணம் சம்பாதித்த 15 சிறுவனை போலீசார் கைது செய்து உள்ளனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.