"இந்தியர்கள் 67.6% பேருக்கு எதிர்ப்பாற்றல்" - செரோ ஆய்வு முடிவு சொல்லும் செய்தி?
பதிவு : ஜூலை 21, 2021, 10:08 PM
கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் கணிசமாக அதிகரித்திருப்பதாக, ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது. கொரோனா பரவல் இதன் மூலம் முடிவுக்கு வருமா? என்பதை அலசுகிறது இந்தத் தொகுப்பு...
குழந்தைகளின் எதிர்ப்பாற்றல் நிலை என்ன?

கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் கணிசமாக அதிகரித்திருப்பதாக, ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது. கொரோனா பரவல் இதன் மூலம் முடிவுக்கு வருமா? என்பதை அலசுகிறது இந்தத் தொகுப்பு... 

அசாமைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு ஆல்பா, டெல்டா ஆகிய இரண்டு வகை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த சூழலில், 67.6 சதவீதம் இந்தியர்களிடம், கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் உருவாகி இருப்பதாக செரோ குழு தெரிவித்துள்ளது.  

செரோ குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளின் படி, 45 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 77.6 சதவீதம் பேருக்கும், வெளியில் அதிகம் நடமாடும் 18 முதல் 44 வயது பிரிவினரில், 66.7 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பாற்றல் உருவாகி உள்ளது.

10 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களில் 61.6 சதவீதம் பேருக்கும், 6 முதல் 9 வயது பிரிவினரில் 57.2 சதவீதம் பேருக்கும் எதிர்ப்பாற்றல் உருவாகி உள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 62.2 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்பதும், 13 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செரோ ஆய்வு முடிவு ஓரளவுக்கு ஆறுதலை ஏற்படுத்தினாலும், இதைக் கொண்டு தன்னிறைவு அடைய முடியாது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.