செல்போன்களை ஹேக் செய்த 15 வயது சிறுவன் கைது
பதிவு : ஜூலை 21, 2021, 01:56 PM
மத்திய பிரதேச மாநிலத்தில் பலரது செல்போன்களை ஹேக் செய்து, தகவல்களை திருடி பிளாக்மெயில் செய்து பணம் சம்பாதித்த 15 சிறுவனை போலீசார் கைது செய்து உள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் பலரது செல்போன்களை ஹேக் செய்து, தகவல்களை திருடி பிளாக்மெயில் செய்து பணம் சம்பாதித்த 15 சிறுவனை போலீசார் கைது செய்து உள்ளனர். சிறுவனிடம் விசாரணை செய்ததில் போலீசாரை தலை சுற்றவைக்கும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் புதியவற்றை கற்றுக்கொள்ள லட்சக்கணக்கான தகவல்களை தாங்கி நிற்கிறது இணைய உலகம். இதில் நல்லவற்றை கற்போர் சிறப்பையும், தீயவற்றை கற்று செயல்படுத்துவோர் சிறையையும் பயனாக பெறுகிறார்கள். இதில் 2-வது ரகத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனை மத்திய பிரதேச மாநில போலீசார் கைது செய்திருக்கிறார்கள். மாநிலத்தின் சிங்ராலி மாவட்டத்தில் சமீப காலமாக செல்போன்கள் ஹேக் செய்யப்படும் சம்பவம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதை நிறுத்தும் சூழலுக்கு சென்றுள்ளனர். இதுகுறித்து நீண்ட நாள் விசாரணையை மேற்கொண்ட போலீசார் பொறியில் அகப்பட்டிருப்பது வெறும் 15 வயதே ஆன சிறுவன் என்பது தெரியவந்துள்ளது.
விசாரணையில் தான் எப்படி அனைவரது செல்போனையும் ஹேக் செய்தேன் என சிறுவன் அளித்த விளக்கம் போலீசாரை தூக்கி வாரிப்போட்டுள்ளது. சர்வதேச அளவில் சிறந்த ஹேக்கராக வேண்டும் என கம்ப்யூட்டரில் மூழ்கி இருந்துள்ளான். அப்போது ஹேக்கிங் தொடர்பான பல தகவல்களை திரட்டி படித்து அதனை செயல்படுத்தியும் உள்ளான் என்பது தெரியவந்துள்ளது. 
சில கனடா நாட்டு செல்போன் எண்களையும் வாங்கியுள்ள சிறுவன், இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீன செயலிகளை தரவிறக்கம் செய்துள்ளான். இருப்பிடத்தை மாற்றி காட்ட ஜிபிஎஸ் செட்டிங்கை மாற்றியதுடன் தடை செய்யப்பட்ட செயலிகளையும் கற்று தேர்ந்துள்ளான். 
பின்னர் யாரிடம் பணம் பறிக்க வேண்டுமோ அவரிடம் வாட்ஸ் அப்பில் தன்னை ஒரு வெளிநாடு வாழ் இந்திய பெண்ணாக அறிமுகம் செய்துக் கொண்டு உரையாடல், வீடியோ பகிர்வை தொடர்ந்திருக்கிறார். அப்போது எதிராளியின் செல்போனிலிருக்கும் தகவல்களை களவாடியதுடன், அவர் ஆபாசமாக உதிர்க்கும் வார்த்தைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி மிரட்டி பணம் பறித்து உள்ளார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் புகாரளிக்க முன்வராத நிலையில், பணத்தை பல கணக்குக்கு மாற்றி பிளாக்வெப் மூலமாக கிரிப்டோகரன்சியாகவும் மாற்றியிருக்கிறார்.10 ஆம் வகுப்பு தேர்வை 2 முறை எழுதியும் தேர்ச்சிபெறாத சிறுவன் ஹேக்கிங் செய்ய தொழில்நுட்பத்தை பயன்படுத்திய விதம் கண்டும் திகைத்து நிற்கின்றனர் அம்மாநில போலீசார்.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

56 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

41 views

பிற செய்திகள்

கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : கேரளா, மகாராஷ்டிரா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

6 views

கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - கேரளா, மகாராஷ்டிரா பயணிகளுக்கு கட்டுப்பாடு

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

5 views

"ரயில்வே தனியார்மயமாகவில்லை" - மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்

நாட்டில் எந்த ஒரு பயணிகள் ரயிலோ, வழித்தடமோ தற்போது வரை தனியார் மயமாக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

4 views

வாக்காளர் அட்டை-ஆதார் இணைக்கும் திட்டம் : "மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது" - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் திட்டம், தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

5 views

அவையின் மையப்பகுதியில் முழக்கம் - டிஎம்சி எம்.பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட்

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் ஆறு பேரை இன்று நாள் சஸ்பெண்ட் என மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்துள்ளார்.

5 views

வேளாண் திருத்தச் சட்டம் - 2 எம்.பி.கள் மோதல்

வேளாண் சட்டத்திருத்த விவகாரத்தில் இரு எம்.பி.க்கள் நேருக்கு நேர் கருத்து மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.