ஆபாச படமெடுத்து வெளிநாடுகளில் விற்பனை- நடிகை சில்பா ஷெட்டியின் கணவர் கைது
பதிவு : ஜூலை 21, 2021, 11:41 AM
ஆபாச படமெடுத்து வெளிநாடுகளில் விற்பனை செய்து வந்ததாக நடிகை சில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டார்.
ஆபாச படமெடுத்து வெளிநாடுகளில் விற்பனை செய்து வந்ததாக நடிகை சில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சினிமா தவிர்த்து சமூக பணிகளால் அறியப்படும் நடிகைகளில் ஒருவர் சில்பா ஷெட்டி.. சுற்றுசூழல், விலங்குகள் பாதுகாப்பு குறித்து பிரசாரம் மேற்கொள்ளும் அவர், மக்கள் நலத்திற்கான உணவுபழக்கம், யோகா பயிற்சிகளையும் வழங்கிவருகிறார்.மறுபுறமோ அவருடைய கணவர் ராஜ்குந்த்ரா சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக இருக்கிறார். ஐபிஎல் சூதாட்டம், பணமோசடி, தங்க மோசடியென அவருக்கு எதிராக நீளும் புகார்களில் இப்போது ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.செல்போன் செயலிகளில் ஆபாச படங்கள் வெளியாவதை கண்காணித்து வந்த மும்பை குற்றப்பிரிவு போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.விசாரணையில் ஆபாச படங்களில் காணப்பட்டவர்கள், படங்களை எடுத்தவர்கள் வரிசையாக போலீசாரிடம் சிக்கினர். இதில் ராஜ்குந்த்ராவின் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய உமேஷ் காந்தும் அடங்குவார். அவரிடம் போலீசார் தங்களுடைய பாணியில் விசாரித்தபோது, அந்த கும்பல் எப்படி செயல்பட்டது, ராஜ்குந்த்ராவின் பங்கு என்ன என்பது தெரியவந்ததும் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  
தயாரிப்பு நிறுவனம் சார்பில் மும்பை பங்களாவில் ஆபாச படம் எடுக்கப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் தன்வீர் ஹாஸ்மி, தன்னிடம் வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளை வெப் தொடரில் நடிக்கவைப்பதாக கூறி ஆபாச படத்தில் நடிக்க வைத்துள்ளார்.பின்னர், ராஜ் குந்த்ரா தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும், உமேஷ் காந்த், இந்திய சட்டங்களில் இருந்து தப்பிக்க வீடியோக்களை  WeTransfer செயலி மூலம் லண்டனை சேர்ந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார். அங்கிருந்து பிற செயலிகளில் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு ஒரு வீடியோ 3 லட்சம் ரூபாய் வரையில் விற்கப்பட்டுள்ளது என்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் ராஜ்குந்த்ராவுக்கு எதிராக வலுவான ஆதாரம் இருப்பதாக மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நக்ராலே தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

56 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

41 views

பிற செய்திகள்

கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : கேரளா, மகாராஷ்டிரா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

4 views

கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - கேரளா, மகாராஷ்டிரா பயணிகளுக்கு கட்டுப்பாடு

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

5 views

"ரயில்வே தனியார்மயமாகவில்லை" - மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்

நாட்டில் எந்த ஒரு பயணிகள் ரயிலோ, வழித்தடமோ தற்போது வரை தனியார் மயமாக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

4 views

வாக்காளர் அட்டை-ஆதார் இணைக்கும் திட்டம் : "மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது" - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் திட்டம், தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

5 views

அவையின் மையப்பகுதியில் முழக்கம் - டிஎம்சி எம்.பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட்

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் ஆறு பேரை இன்று நாள் சஸ்பெண்ட் என மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்துள்ளார்.

5 views

வேளாண் திருத்தச் சட்டம் - 2 எம்.பி.கள் மோதல்

வேளாண் சட்டத்திருத்த விவகாரத்தில் இரு எம்.பி.க்கள் நேருக்கு நேர் கருத்து மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.