பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி - மின் சைக்கிளை கண்டுபிடித்த இளைஞர்
பதிவு : ஜூலை 21, 2021, 10:58 AM
ஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கிலோ மீட்டர் பயணிக்கும் வகையில் மின்சார சைக்கிளை விழுப்புரத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் வடிவமைத்து அசத்தியுள்ளார்.
பெட்ரோல்- டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
இதனால் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விழுப்புரம் அருகே உள்ள பக்கமேடு கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் என்ற இளைஞர் பயனுள்ள கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார். டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்த இவர், இரும்பு கடைக்கு சென்று அங்கிருந்த பழைய சைக்கிள் ஒன்றை ரூ.2 ஆயிரத்திற்கு வாங்கி வந்து அதில் மின் மோட்டார், பேட்டரி, கண்ட்ரோலர் என்பது உள்ளிட்ட கருவிகளை பொருத்தி மின்சாரத்தில் சைக்கிளை வடிவமைத்துள்ளார். இதற்காக மொத்தம் ரூ.20 ஆயிரம் செலவு செய்ததாக கூறுகிறார் பாஸ்கரன்.

மின்சார சைக்கிளில் உள்ள பேட்டரியில் ஒருமுறை சார்ஜ் போட்டால் 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். ஒரு முறை சார்ஜ் போடுவதற்கு ஒரு யூனிட் மின்சாரம் தேவைப்படும். இந்த ஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். இவரின் முயற்சி அனைவரின் பாராட்டுதலை பெற்றுள்ளது. 

பிற செய்திகள்

"முதலீட்டாளர்களின் முதல் முகவரி-தமிழ்நாடு" - தொழில் கூட்டமைப்பினரின் கருத்து என்ன?

28 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 49 திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி இருக்கும் நிலையில், தொழில் கூட்டமைப்பினரின் கருத்து என்ன? என்பது பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

9 views

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு? - முதல்வரிடம் அறிக்கை அளித்த ஆணையம்

தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான ஆணையம், முதலமைச்சர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

8 views

கூட்டுறவு கடன் சங்கத்தில் கையாடல் - ரூ.16.50 லட்சம் பணம் மோசடி அம்பலம்

தேனி அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் கையாடல் செய்த கூட்டுறவு செயலாளரை போலீசார் கைது செய்தனர்...

10 views

3 ஆண்டுகள் பணி - இடமாற்றம் செய்ய உத்தரவு

மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே நியாய விலைக்கடையில் பணியாற்றும் பணியாளர்களை இடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

9 views

+2 தேர்வு முடிவுகள் - கணிசமான மாணவர்கள் அதிக மதிப்பெண்கள்

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் கடும் போட்டி நிலவும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

10 views

இந்திய கடல்சார் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

இந்திய மீனவர்களின் வாழ்வாதரத்தைப் பாதிக்கும் இந்திய கடல்சார் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.