கூட்டுறவு கடன் சங்கத்தில் கையாடல் - ரூ.16.50 லட்சம் பணம் மோசடி அம்பலம்
பதிவு : ஜூலை 21, 2021, 09:17 AM
தேனி அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் கையாடல் செய்த கூட்டுறவு செயலாளரை போலீசார் கைது செய்தனர்...
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே ரெங்கசமுத்திரம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன் போன்ற கடன்கள் வழங்கப்படுகின்றன.இந்த சங்கத்தில் கடன்பெற்ற விவசாயிகள் தங்கள் பணத்தை திருப்பி செலுத்தி வந்துள்ளனர். ஆனால் அந்த பணத்தை முறையாக கூட்டுறவு சங்கத்தின் கணக்கில் வரவு வைக்காமல் கையாடல் செய்து இருப்பதாக புகார்கள் அதிகளவில் வந்தன. அதன்பேரில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 2013 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் விவசாயிகள் செலுத்திய தவணைத் தொகை கணக்கில் இல்லாதது தெரியவந்தது. அதன்படி இந்த 5 ஆண்டுகளில் சுமார் 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டிருப்பதை அறிந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த கால கட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கத்தில் பணிபுரிந்து வந்த ஜக்கம்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் செயலாளராக பணிபுரிந்து வந்ததும் அவரே இந்த பணத்தை கையாடல் செய்திருப்பதும் உறுதியானது. இதனை தொடர்ந்து முருகேசன் குறித்து கூட்டுறவு துணை பதிவாளர் முத்துக்குமார், தேனி மாவட்ட வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகேசனை  செய்து செய்தனர். விவசாயிகளுக்கு கடன் வழங்கக் கூடிய கூட்டுறவு சங்கத்தின் நடந்த இந்த மோசடி சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.... 


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.