தேர்தலுக்கு முன் கொரோனா தொற்று 2.3%; ​"தேர்தலுக்கு பின் 33% ஆக அதிகரிப்பு​ - திரிணாமூல் காங். எம்.பி. சாந்தனு சென்
பதிவு : ஜூலை 20, 2021, 08:38 PM
​மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலின் போது, அந்த மாநிலத்தில் கொரோனா தொற்று 33 சதவிகிதம் அதிகரித்ததாக, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.சாந்தனு தெரிவித்துள்ளார்.
​மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலின் போது, அந்த மாநிலத்தில் கொரோனா தொற்று 33 சதவிகிதம் அதிகரித்ததாக, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.சாந்தனு தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு, ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட்டதை சுட்டிக்காட்டினார். ஆனால், மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், இதனால் கொரோனா தொற்று அதிகரித்ததாக கூறினார். தேர்தலுக்கு முன் இரண்டு புள்ளி மூன்று சதவிகிதம் இருந்த தொற்று, தேர்தலுக்கு பின்னர் 33 சதவிகிதம் ஆக உயர்ந்ததாக சாந்தனு சென் குறிப்பி​ட்டார். பின்னர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தீவிர தடுப்பு நடவடிக்கையில், கொரோனா ​தொற்று பாதிப்பு ஒன்று புள்ளி எட்டு சதவிகிதத்திற்கும் கீழ் வந்ததாக கூறினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.