சுகாதார அமைச்சரை பலிகடா ஆக்கினார் பிரதமர் மோடி - எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
பதிவு : ஜூலை 20, 2021, 08:33 PM
கொரோனா விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய சுகாதார அமைச்சரை பலிகடா ஆக்கியதாக மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொரோனா விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய சுகாதார அமைச்சரை பலிகடா ஆக்கியதாக மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, குற்றஞ்சாட்டியுள்ளார். 

மாநிலங்களவையில் பேசிய அவர், கொரோனா காலத்தில் தங்களது உயிரை தியாகம் செய்த மருத்துவர்கள் செவிலியர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக கூறினார். ஆக்சிஜன், மற்றும் பிளாஸ்மா தானத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடி, பொதுமக்களை விளக்கு ஏற்றி, கைத்தட்ட கூறியதாகவும், அதனை நம்பி மக்களும் அவ்வாறு செய்ததாக மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார். ஆனால் பிரதமர் மோடி, கொரோனா விவகாரத்தில் பொறுப்பேற்காமல், சுகாதார அமைச்சரை பலிகடா ஆக்கியதாகவும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, புகார் கூறினார். 
===========

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.