மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு - மத்திய அரசுக்கு உத்தரவு
பதிவு : ஜூலை 19, 2021, 04:41 PM
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 69 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு - மத்திய அரசுக்கு உத்தரவு

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 69 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக, உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், இட ஒதுக்கீடு குறித்து குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு, 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என பரிந்துரை அளித்தும், மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என வாதிட்டார்.மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இடஒதுக்கீடு வழங்க தயாராக இருப்பதாகவும், எந்த நீதிமன்ற அவமதிப்பும் செய்யவில்லை எனவும் கூறினர்.இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

297 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

59 views

கோயில் நிலங்களை அரசு மீட்டெடுக்கும் - யார் ஆக்கிரமித்து இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்

சென்னை சேத்துப்பட்டில் 70 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அம்பேத்கார் விளையாட்டு திடலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்து விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

53 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

41 views

பிற செய்திகள்

"7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6 views

தடுப்பூசி கோட்டாவில் மாற்றம் - மாநில அரசுகளுக்கு 75% தடுப்பூசி

தனியார் மருத்துவமனைகளுக்கான 25% சதவீத தடுப்பூசி கோட்டாவில் மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

5 views

பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் எங்கே? - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பக்தவத்சல பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 views

13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் - நிதியமைச்சர் பி.டி.ஆர் தாக்கல் செய்கிறார்

தமிழக பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

31 views

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கள் - "தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும்"

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார்.

13 views

"தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு" - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.