"சட்டப் பேரவை நிகழ்வு - நேரடி ஒளிபரப்பு தேவை" - கமல்ஹாசன்
பதிவு : ஜூலை 19, 2021, 02:01 PM
தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிப்படையான அரசு நிர்வாகம், பங்கேற்பு ஜனநாயகம் என்பதை தொடக்கம் முதல் வலியுறுத்தி வருவதாகவும், சட்டமன்ற நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்வது பொதுப் பிரச்னைகள் மீது நிகழ்த்தும் விவாதங்களைச் சாமானியன் அறிந்துகொள்ள உதவும் என கோரியுள்ளார். இதேகோரிக்கையை வலியுறுத்தி 2012-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, சாக்குபோக்கு சொல்லி அதிமுக அரசு நிலுவையில் போட்டுவிட்டதாக சாடிய அவர், தேர்தல் அறிக்கையில் கூறியது போல், சட்டமன்ற நிகழ்வுகளை திமுக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

நாடாளுமன்றம் மற்றும் கேரள சட்டமன்ற நேரடி ஒளிபரப்பை குறிப்பிட்ட அவர், பட்ஜெட் கூட்டத்தொடரில் துறை வாரியான  மானியக் கோரிக்கை விவாதங்களை நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு ஆவன செய்ய கோரியுள்ளார். மக்கள் தங்களைப் பாதிக்கும் விவகாரங்களில், தங்கள் பிரதிநிதிகளின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வார்கள் என்றும், இணைய வழி நேரடி ஒளிபரப்பு, தமிழகத்துக்கு ஒரு சவாலான விஷயமல்ல என்றும் சுட்டிக்காட்டி உள்ளார். 

பிற செய்திகள்

13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் - நிதியமைச்சர் பி.டி.ஆர் தாக்கல் செய்கிறார்

தமிழக பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

7 views

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கள் - "தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும்"

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார்.

9 views

"தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு" - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

15 views

அறநிலைத்துறையின் மூலம் கல்லூரிகள் விரைவில் கட்டப்படும் - அமைச்சர் சேகர்பாபு

அறநிலைத்துறையின் மூலம் கல்லூரிகள் விரைவில் கட்டப்படும் - அமைச்சர் சேகர்பாபு

16 views

நரம்பியல் மருத்துவர் கொலை வழக்கு : "குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள்" - தண்டனை விவரங்கள் பிற்பகல் அறிவிப்பு

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் ஒன்பது பேர் குற்றவாளிகள் என சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

18 views

வேறு சமூக சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டல் : சிறுமியை மிரட்டிய புகாரில் இளைஞர் கைது- சமூக மோதல் ஏற்படும் சூழல்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 17 வயது சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.