காதல் திருமணம்; ஏமாற்றிய போலீஸ் கணவர் - 45 ஆண்டுகளுக்கு மேலாக தவித்த பெண்
பதிவு : ஜூலை 19, 2021, 09:56 AM
45 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துவிட்டு, சில நாட்களிலேயே நடத்தையில் சந்தேகம் எனக்கூறி ஏமாற்றிய போலீஸ் கணவர் மீது மனைவி புகார் அளித்துள்ளார்.
45 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துவிட்டு, சில நாட்களிலேயே நடத்தையில் சந்தேகம் எனக்கூறி ஏமாற்றிய போலீஸ் கணவர் மீது மனைவி புகார் அளித்துள்ளார். நடந்தது என்ன? விரிவாக பார்ப்போம்...
1975ஆம் ஆண்டு திருமணம்... காதலித்து கரம்பிடித்தவர் 7வது மாதத்திலேயே கைவிட்டு செல்கிறார்.. இந்த சமயத்தில் மகள் பிறக்க, தந்தை இவர் தான் என நிரூபிக்க கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேல் போராடியுள்ளார் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர்.விஜயகோபாலன் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர், 1975ஆம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சுமார் 7 மாதங்கள் கடந்த பின்னர் மனைவி கருவுற்றிருந்தை அறிந்த விஜயகோபாலன், ஐதராபாத்திற்கு செல்கிறேன் நீ வேறு ஒருவரை மணமுடித்துக்கொள் எனக்கூறி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.அடுத்த சில ஆண்டுகளில் அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து காவல்நிலையத்தில் பணியாற்றி வருவதை அறிந்து அதிர்ந்து போன இவர், 1985ஆம் ஆண்டு செம்பியம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் திருமணத்திற்கான போதிய ஆதாரம் இல்லை, ஆதரவு கொடுக்கவும் ஆள் இல்லாததால், வழக்கை விட்டுவிட்டு மகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வந்துள்ளார்.வெளிநாடு சென்ற மகள், கணவரை இழந்த பின்னர் ஆதரவுக்கு யாருமின்றி 2010ஆம் ஆண்டு சொந்த ஊர் திரும்ப, விஜயகோபாலன் தான் தந்தை எனவும், எங்களை ஏமாற்றிவிட்டதாகவும் கூறி நீதிமன்றத்தை நாடினார். தொடர்ந்து 5 ஆண்டுகள் வழக்கு நடைபெற, 2015ஆம் ஆண்டு டி.என்.ஏ பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் விஜயகோபாலன் தான் பெண்ணின் கணவர் என தெரியவந்தாலும், பல்வேறு சட்ட சிக்கல்களால் 2020ஆம் ஆண்டுதான் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது..இந்த தீர்ப்பை வைத்து பாதிக்கப்பட்ட பெண், தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இறுதியாக அயனாவரம் போலீசார், விஜயகோபாலன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். அவதூறு பேச்சுக்கள், வீண்பழி, சட்டப்போராட்டம் என வாழ்நாளில் பாதியை போக்கிவிட்ட இந்த பெண், கடைசி நம்பிக்கையாக நியாயம் கேட்டு பொதுவெளியில் குரல் கொடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

55 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

41 views

பிற செய்திகள்

13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் - நிதியமைச்சர் பி.டி.ஆர் தாக்கல் செய்கிறார்

தமிழக பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

15 views

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கள் - "தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும்"

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார்.

11 views

"தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு" - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

15 views

அறநிலைத்துறையின் மூலம் கல்லூரிகள் விரைவில் கட்டப்படும் - அமைச்சர் சேகர்பாபு

அறநிலைத்துறையின் மூலம் கல்லூரிகள் விரைவில் கட்டப்படும் - அமைச்சர் சேகர்பாபு

16 views

நரம்பியல் மருத்துவர் கொலை வழக்கு : "குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள்" - தண்டனை விவரங்கள் பிற்பகல் அறிவிப்பு

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் ஒன்பது பேர் குற்றவாளிகள் என சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

23 views

வேறு சமூக சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டல் : சிறுமியை மிரட்டிய புகாரில் இளைஞர் கைது- சமூக மோதல் ஏற்படும் சூழல்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 17 வயது சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.