பெண்களுக்கான இலவச பயண சீட்டில் முறைகேடு
பதிவு : ஜூலை 18, 2021, 04:08 PM
சேலத்தில் பெண்களுக்கான இலவச பயணச்சீட்டை, வட மாநிலத்தவர்களுக்கு கொடுத்து கட்டணம் வசூலித்த அரசு பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வட மாநிலத்தவர்களிடம் கொடுத்து கட்டணம் வசூல்
அரசு பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம்
போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை

சேலத்தில் பெண்களுக்கான இலவச பயணச்சீட்டை, வட மாநிலத்தவர்களுக்கு கொடுத்து கட்டணம் வசூலித்த அரசு பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என்ற நடைமுறை அமலில் உள்ளது. இந்த நிலையில் சேலம் ரயில் நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் சென்ற அரசு பேருந்தில் வடமாநிலத்தை சேர்ந்த 26 பேர் ஏறியுள்ளனர். அவர்களிடம் பெண்களுக்கான இலவச பயணச்சீட்டை நடத்துனர் நவீன்குமார் கொடுத்து கட்டணம் வாங்கியுள்ளார். பேருந்து ஐந்து ரோடு அருகே வந்த பொழுது போக்குவரத்து துறை அதிகாரிகள் டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது வடமாநில ஆண்களிடம், பெண்களுக்கான இலவச  பயணசீட்டு இருப்பதை கண்ட அவர்கள் மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இதில், இலவச பயண சீட்டை கொடுத்து கட்டணம் வசூல் செய்தது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, நடத்துனர் நவீன் குமாரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

246 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

199 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

132 views

பிற செய்திகள்

சென்னையில் 2வது விமான நிலையம்? - விமான நிலைய விரிவாக்கப் பணி மும்முரம்

சென்னையில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு இன்னும் இறுதி செய்யாததால், அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

56 views

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை -அமைச்சர் செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.

21 views

"மழை நீரை முழுமையாக சேமிக்க நடவடிக்கை" - முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மழை காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்தும் வகையில், புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைத்திட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

15 views

"புதிய மாநகராட்சி, நகராட்சி விரைவில் அறிவிப்பு" - அமைச்சர் கே.என்.நேரு

புதிய மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் விரைவில் அறிவிக்கப்பட்டதும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டு, இந்த ஆண்டிற்குள் நடத்தி முடிக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

35 views

"சென்னை, கரூரில் சொந்த வீடு இல்லை" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்....

30 views

மீண்டும் லாட்டரி சீட்டு - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

தமிழகத்தில் ஏழை எளிய மக்களை பாதிக்கக்கூடிய லாட்டரி சீட்டு விற்பனையை தமிழக அரசு மீண்டும், கொண்டு வந்தால் மக்களின் மிகப் பெரிய எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.