"இயல்பை விட 78% கூடுதல் மழை"
பதிவு : ஜூலை 18, 2021, 04:06 PM
தமிழகத்தில் ஜூன் 1 முதல் நேற்று வரையில் இயல்பை விட கூடுதலாக 78 சதவீதம் மழை கிடைத்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 1 முதல் நேற்று வரையில் இயல்பை விட கூடுதலாக 78 சதவீதம் மழை கிடைத்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 17 வரையிலான காலகட்டத்தில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய இயல்பான மழை அளவு 8 புள்ளி 8 செண்டி மீட்டராகும்.

ஆனால் நேற்று வரை 15 புள்ளி 6 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இது இயல்பான மழை அளவை விட 78 சதவீதம் கூடுதல் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

குறிப்பாக பெரம்பலூரில் இயல்பை விட 370 சதவீதமும் 

திருச்சியில் இயல்பை விட 294 சதவீதமும் 

வேலூரில் 216 சதவீதமும் கூடுதலாக மழை பெய்துள்ளது.

அதேசமயம் கன்னியாகுமரியில், இயல்பை விட 34 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. 

தென்காசியிலும் இயல்பை விட 23 சதவீதம் குறைவாகவும் கிடைத்துள்ளது.

செப்டம்பர் இறுதி வரை தென்மேற்கு பருவ மழைக்காலம் என்பதால் இனி வரும் நாட்களில் கிடைக்கும் மழை அளவைப் பொறுத்தே தென்மேற்கு பருவமழை கூடுதலாக கிடைத்திருக்கிறதா குறைவாக கிடைக்கிறதா என்பது தெரியவரும்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

245 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

199 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

131 views

பிற செய்திகள்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை -அமைச்சர் செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.

14 views

"மழை நீரை முழுமையாக சேமிக்க நடவடிக்கை" - முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மழை காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்தும் வகையில், புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைத்திட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

15 views

"புதிய மாநகராட்சி, நகராட்சி விரைவில் அறிவிப்பு" - அமைச்சர் கே.என்.நேரு

புதிய மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் விரைவில் அறிவிக்கப்பட்டதும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டு, இந்த ஆண்டிற்குள் நடத்தி முடிக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

34 views

"சென்னை, கரூரில் சொந்த வீடு இல்லை" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்....

30 views

மீண்டும் லாட்டரி சீட்டு - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

தமிழகத்தில் ஏழை எளிய மக்களை பாதிக்கக்கூடிய லாட்டரி சீட்டு விற்பனையை தமிழக அரசு மீண்டும், கொண்டு வந்தால் மக்களின் மிகப் பெரிய எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

50 views

90களில் கொடிகட்டி பறந்த ரியல் டான்சிங் ரோஸ் - யார் இந்த டான்சிங் ரோஸ்?

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் இடம்பெற்ற டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

607 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.