அரசு பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி வழக்கு - முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு
பதிவு : ஜூலை 17, 2021, 07:00 PM
அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்ய முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டணம்  வசூலிக்கப்படுவதாக கூறி , பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக உள்ள முரளிதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் பெற்றோர் ஆசிரியர் சங்க இணைப்பு கட்டணமான 50 ரூபாயை தவிர கூடுதல் கட்டணம் எதையும் வசூலிக்க கூடாது என உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது 
கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், மீறி செயல்பட்டால் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்  அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதை பதிவு செய்த நீதிபதி, சுற்றறிக்கையை அனைத்து பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் வைக்க உத்தரவிட்டார். மேலும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என, பள்ளிகளில் ஆய்வு நடத்தி, பள்ளி கல்வி ஆணையருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் நீதிபதி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பள்ளி கல்வி ஆணையர், வரும் 27ந்தேதி  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி  விசாரணையை தள்ளி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

193 views

தண்டவாளத்தில் சிக்கிய இளைஞர் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்

சேலம் ரயில் நிலையத்தில் இளைஞரின் உயிரை காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

118 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

63 views

தரமற்ற சாலைகள் அமைத்ததாக புகார் - 3 பொறியாளர்கள் தற்காலிக பணி நீக்கம்

சிவகங்கை அருகே தரமற்ற சாலைகள் அமைத்த நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த 3 பொறியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

45 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

15 views

பிற செய்திகள்

இந்தியாவின் சிறந்த முதல்வராக மு.க. ஸ்டாலின் தேர்வு - ’ஓர்மாக்ஸ்’ ஆய்வு முடிவில் அறிவிப்பு

இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருப்பதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

42 views

சிவசங்கர் பாபாவிற்கு உடந்தையாக செயல்பட்ட ஆசிரியர்கள் தலைமறைவு

சிவசங்கர் பாபாவிற்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியைகளுக்கு சிபிசிஐடி போலீசாரால் சம்மன் வழங்கப்பட்ட நிலையில், அதனை பெறாமல் அவர்கள் தலைமறைவாகி உள்ளனர்.

36 views

கடந்த அதிமுக ஆட்சியில் போரூர் ஏரியை மூட முயற்சி நடந்தது - மா. சுப்பிரமணியம்

திமுக நடத்திய போராட்டத்தால் தான் போரூர் ஏரி காப்பாற்றப்பட்டிருக்கிறது எனவும், மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

32 views

உருவாகிறது, காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த இரு தினங்கள் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

37 views

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

61 views

சாலையோர மரங்களை வெட்டுவது தொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

திருச்செந்தூரிலிருந்து - அம்பாசமுத்திரம் வரை சாலையோர மரங்களை வெட்டுவது தொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.