இந்தியா Vs பாகிஸ்தான் மோதல் : டி20 உலக கோப்பை - ஐசிசி அறிவிப்பு
பதிவு : ஜூலை 17, 2021, 06:48 PM
இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் மோத இருக்கிறது, இந்திய அணி. இதுபற்றி பார்க்கலாம்....
இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலக கோப்பை, கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த போட்டியில், 12 அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்க உள்ளன.இதில் குரூப் 1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும்,
குரூப் 2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.  மற்ற நான்கு இடங்களுக்கு தகுதிச்சுற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.லீக் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத இருப்பது, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.வழக்கமாக சீரியலை விரும்பி பார்க்கும் பெண்களையும் சீட்டின் நுனிக்கே சென்று கிரிக்கெட் பார்க்க வைத்தது... 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா,  பாகிஸ்தான் அணிகள் மோதிய உலக கோப்பை அரையிறுதி போட்டி.மார்ச் 30 ஆம் தேதி, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த போட்டியை உலகெங்கும் 6 கோடியே 73 லட்சம் கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு டிவியில் பார்த்து ரசித்தது., இன்றளவும் பெரிய ரெக்கார்டாக பார்க்கப்படுகிறது. களத்தில் இரு அணிகளும் இதுவரை மோதிய போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் கையே சற்று ஓங்கியிருந்தாலும், உலக கோப்பை தொடரை பொறுத்தவரை, இதுவரை ஒரு முறை கூட இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதில்லை...
 இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை 50 ஓவர் உலக கோப்பை போட்டியிலும், ஐந்து முறை 20 ஓவர் உலக கோப்பை போட்டியிலும் களம் கண்டதில்... அனைத்திலும் இந்திய அணியே வெற்றி வாகை சூடியிருப்பது... இந்திய அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. உலக கோப்பை தொடர்களில் பாகிஸ்தானின் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக விளங்கியவர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.... 3 முறை 'மேன் ஆப் தி மேச்' பட்டத்தை தன் வசமாக்கியிருந்தார், சச்சின்..அந்த வரிசையில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருபவர், விராட் கோலி... ஒரு முறை 50 ஓவர் உலக கோப்பையிலும், இரு முறை டி-20 உலக கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 'மேன் ஆப் தி மேச்'  பட்டத்தை கைப்பற்றியிருந்தார், விராட்...மறுபுறம், சமீபத்தில் இங்கிலாந்து அணியுடன் 50 ஓவர் போட்டியில் தனது படுதோல்விகளால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது, பாகிஸ்தான் அணி. இதனால் கோலி தலைமையிலான இந்திய அணியும் Vs பாபர் அசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதும் டி20 உலக கோப்பையில்.... இந்திய அணிக்கே கூடுதல் பலம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் போட்டி போட்டு கொண்டு டிவீட் செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

171 views

சொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.

46 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

35 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

17 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ருசிகரம் - காதலை வெளிப்படுத்திய பயிற்சியாளர்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அர்ஜென்டினா வாள் வீச்சு வீராங்கனையிடம் அவரின் பயிற்சியாளர் காதலை வெளிப்படுத்திய ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.

12 views

2020 டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா : கூடைப்பந்து களத்தில் கலக்கும் ரோபோக்கள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பு அடைந்துவரும் நிலையில், கூடைப்பந்து விளையாட்டில் ரோபோக்களும் கலக்கி வருகின்றன.

34 views

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகள் - முன்னணி வீரர் சிட்ஸிபாஸ் வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்று ஆட்டத்துக்கு, கிரீஸை சேர்ந்த முன்னணி வீரர் சிட்ஸிபாஸ் முன்னேறி உள்ளார்.

20 views

இரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் வீரர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை

இரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் நீச்சல் வீரர் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார்.

9 views

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி - இந்திய வீராங்கனை லவ்லினா காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு இந்திய வீராங்கனை லவ்லினா பார்ஹோஹெய்ன் முன்னேறி உள்ளார்.

12 views

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகள் - ஜப்பான் வீராங்கனை ஒசாகா அதிர்ச்சி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் ஜப்பானை சேர்ந்த முன்னணி வீராங்கனை நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்து உள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.