இந்தியாவில் 20 லட்சம் கணக்குகள் முடக்கம் - வாட்ஸ்ஆப் நடவடிக்கை
பதிவு : ஜூலை 17, 2021, 12:40 PM
இந்தியாவில் 20 லட்சம் வாட்ஸப் பயனாளிகளின் கணக்குகளை, விதிமுறைகளை மீறியதற்காக வாட்ஸப் நிறுவனம் தடை செய்துள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் 20 லட்சம் வாட்ஸப் பயனாளிகளின் கணக்குகளை, விதிமுறைகளை மீறியதற்காக வாட்ஸப் நிறுவனம் தடை செய்துள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

உலகெங்கும் சுமார் 200 கோடி பயனாளிகளைக் கொண்டுள்ள வாட்ஸப் நிறுவனத்திற்கு, இந்தியாவில் 40 கோடி பயனாளிகள் உள்ளனர்.

 
இவர்களில் 20 லட்சம் இந்தியப் பயனாளிகளின் கணக்குகளை, விதிமுறைகளை மீறியதற்காக மே, ஜூன் மாதங்களில் தடை செய்துள்ளதாக வாட்ஸப் நிறுவனம் கூறியுள்ளது. 

 
தடை செய்யப்பட்ட பயனாளிகளில் 95 சதவீதத்தினர், செய்திகளை மிக அதிக முறை பார்வார்ட் (forward) செய்ததற்காக தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 
தவறான, தேவையில்லாத செய்திகள், காணொளிகள், புகைப்படங்களை மிக அதிக முறை பார்வார்ட் செய்வதன் மூலம், சாதி, மத, இன மோதல்கள், வன்முறை சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், இத்தகைய முன் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக வாட்ஸப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

 
இந்தியாவின் புதிய டிஜிட்ட சட்ட விதிமுறைகளின் கீழ், வாட்ஸப் நிறுவனம் சமர்ப்பித்துள்ள மாதாந்திர அறிக்கையில் இந்த தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

 
மிக நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன், மாதம் ஒன்றுக்கு உலக அளவில் சுமார் 80 லட்சம் கணக்குகளை பல்வேறு விதிமீறல்களுக்காக, வாட்ஸப் நிறுவனம் தடை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

192 views

தண்டவாளத்தில் சிக்கிய இளைஞர் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்

சேலம் ரயில் நிலையத்தில் இளைஞரின் உயிரை காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

115 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

62 views

தரமற்ற சாலைகள் அமைத்ததாக புகார் - 3 பொறியாளர்கள் தற்காலிக பணி நீக்கம்

சிவகங்கை அருகே தரமற்ற சாலைகள் அமைத்த நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த 3 பொறியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

44 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

11 views

பிற செய்திகள்

ஆண்டிற்கு 300 நாட்கள் உறங்கும் நபர் - 2 நிமிடம் மட்டுமே விழித்திருக்கும் நிலை

ராஜஸ்தான் மாநிலத்தில் வினோத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர், ஆண்டிற்கு 300 நாட்கள் உறங்குவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

8 views

ஏழுமலையான் கோயிலில் புஷ்ப பல்லக்கு உலா - ஆனி வார ஆஸ்தானத்தை முன்னிட்டு வீதியுலா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனி வார ஆஸ்தானத்தை முன்னிட்டு, மலையப்ப சுவாமி புஷ்ப பல்லக்கில் நான்கு மாட வீதியில் உலா வந்தார்.

21 views

மாளிகைப்புறம் மேல்சாந்தி நியமன அறிவிப்பு - தேவசம் போர்டின் அறிவிப்பை எதிர்த்து மனு

சபரிமலை மாளிகைப்புறம் மேல்சாந்தி நியமிப்பதற்கான தேவசம் போர்டின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

23 views

மேகதாது அணை விவகாரம் - பிரதமர் மோடியை சந்தித்த கர்நாடக முதல்வர்

மேகதாது அணைத் திட்டம் குறித்து பிரதமர் மோடியிடம், கர்நாடக முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.

58 views

தென்னாப்பிரிக்காவில் தொடரும் வன்முறை : "தமிழர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை" - வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

தென்னாப்பிரிக்காவில் வன்முறையால் பாதிக்கப்பட்டு உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

18 views

"பாஜகவை கண்டு பயந்தால் வெளியேறலாம்" -ராகுல்

பாஜகவை கண்டு அச்சப்படுபவர்கள் தாராளமாக கட்சியை விட்டு வெளியேறலாம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.