அமெரிக்காவில் பரவும் டெல்டா வைரஸ் - நாளுக்கு நாள் அதிகரிக்கும் தினசரி பாதிப்பு
பதிவு : ஜூலை 17, 2021, 12:37 PM
அமெரிக்காவில் கொரோனா தொற்றுதல்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், லாஸ் ஏஞ்செல்ஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் முகக்கவசங்கள் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தொற்றுதல்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், லாஸ் ஏஞ்செல்ஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் முகக்கவசங்கள் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பரவல் குறைந்த பின், சில மாதங்களுக்கு முன்பு, முகக்கவசம் அணிவது பற்றி குழப்பமான சூழல் உருவானது.தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக் கொண்டவர்களுக்கு முகக்கவசம் தேவையில்லை என்று கடந்த மே மாதத்தில் அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாடு மையம் அறிவித்திருந்தது. ஆனால் ஒரு சில மாகாணங்கள் மற்றும் அலுவலகங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டிருந்தால் குழப்பமான சூழல் உருவானது.லாஸ் ஏஞ்செல்ஸ், முகக் கவசங்கள், அமெரிக்க நகரங்கள், தடுப்பூசி விநியோகம்சமீப வாரங்களில் அமெரிக்காவில் டெல்டா வைரஸ் பரவலினால் கொரோனா தொற்றுதல்கள் அதிகரித்து வருகிறது. ஜூன் 15இல்11,872ஆக இருந்த தினசரி தொற்றுதல்களின் அளவு, ஜூலை 15இல் 35,561ஆக அதிகரித்துள்ளது.இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்செல்ஸில் உள்ள அலுவலகங்கள், உள் அரங்குகள், கட்டிடங்களுக்குள் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கடந்த ஆறு நாட்களாக தினசரி தொற்றுதல்களின் எண்ணிக்கை1000க்கும் அதிகமாக தொடர்வதால், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதே போல சாக்ரமென்டோ, ஆஸ்டின் போன்ற பல்வேறு நகரங்ககளில் முகக்கவசங்கள் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரையில் 48 சதவீதத்தினருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

62 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

11 views

பிற செய்திகள்

மேற்கு ஐரோப்பாவில் மழை, வெள்ளம் - ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயம்

மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர்.

8 views

புலிட்சர் விருது வென்ற இந்திய ஊடகவியலாளர் - ஆப்கனில் தலிபான் தாக்குதலில் உயிரிழப்பு

உலக புகழ்பெற்ற புலிட்சர் விருது வென்ற இந்திய புகைப்பட ஊடகவியலாளர், டேனிஷ் சித்திக், ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 views

ஆசியா-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு; தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்போம்" - உலக நாடுகளின் தலைவர்கள் உறுதி

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உலக நாடுகளின் தலைவர்கள் உறுதி அளித்து உள்ளனர்.

9 views

பத்திரிக்கை சுதந்திரத்திற்கு அரசு உறுதுணை - ஆப்கன் அதிபர் உறுதி

ராய்ட்டர்ஸ் புகைப்பட கலைஞர் டேனிஸ் சித்திக் தாலிபான் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.

18 views

இலங்கையில் உருவாகும் துறைமுக நகரம் - இந்திய பெருங்கடலில் அதிகரிக்கும் சீன ஆதிக்கம்

இலங்கை கடற்கரை பகுதியில் உள்கட்டமைப்பை சீனா வலுப்படுத்தி வருவதால் இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என அச்சம் எழுந்துள்ளது.

18 views

தந்தையின் கட்டுப்பாட்டை எதிர்த்து பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் வழக்கு

தனது தந்தைக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தி வரும் பிரபல பாப் பாடகி, பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கு சற்று சாதகமான உத்தரவை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அது பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு...

99 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.