சீன எல்லையில் நடப்பது என்ன? - விளக்கமாக எடுத்துக் கூறிய ராஜ்நாத் சிங்
பதிவு : ஜூலை 17, 2021, 12:37 AM
சீன எல்லையில், நடப்பது என்ன என்பது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே. அந்தோணி மற்றும் சரத் பவாரிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் திங்கட்கிழமையன்று, துவங்க உள்ளது. இந்நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, சீனாவுடனான எல்லைப் பிரச்சனை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. சீன எல்லையில் தற்போதைய நிலை குறித்து ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். இந்த சந்திப்பின்போது, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி முகுந்த் நரவனே ஆகியோர் உடனிருந்தனர்.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.