விம்பிள்டன் டென்னிசில் மேட்ச் பிக்சிங்? - 2 போட்டிகளில் மோசடி என ரகசிய உள்ளீடு
பதிவு : ஜூலை 15, 2021, 07:37 PM
உலக பாரம்பரியமிக்க விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்துள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் உலக பாரம்பரியமிக்க, பழமையான போட்டியாகும். லண்டனில் 1877 முதல் புல்தரையில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் தனி இடம்பிடித்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மேட்ச் பிக்சிங் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றிலும், இரட்டை பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றிலும் இந்த மேட்ச் பிக்சிங் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீரர் பங்குபெற்ற ஆட்டத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் சந்தேகிக்கப்படும் போட்டியில் சம்பந்தப்பட்ட ஜோடி முதல் செட்டை வெற்றிப்பெற்றுள்ளது. இதற்கு அடுத்த செட்களையும் வசப்படுத்தி அந்த ஜோடி வெற்றிபெறலாம் என்ற கட்டத்தில் வேண்டுமென்றே தோல்வியை தழுவியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.மோசடி குறித்து தங்களுக்கு ரகசிய உள்ளீடு மூலம் எச்சரிக்கை வந்துள்ளதாக கூறியிருக்கும் சர்வதேச டென்னின்ஸ் வாரியத்தின் செய்தி தொடர்பாளர், மேட்ச் பிக்சிங் குறித்து எந்த ஒரு ஆவணமும் தங்களிடம் பகிரப்படவில்லை எனக் கூறியிருக்கிறார்.இதற்கிடையே மேட்ச் பிக்சிங், பெருமளவு தொகையுடன் அரங்கேறியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.  டென்னிஸ் உலகை அதிரச்செய்திருக்கும் இந்த மேட்ச் பிக்சிங் குறித்து சர்வதேச டென்னிஸ் வாரியம் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறது.  

தொடர்புடைய செய்திகள்

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

30 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

27 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டி - தங்கப் பதக்கத்தை பகிர்ந்த கத்தார், இத்தாலி வீரர்கள்

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டிக்கான தங்கப் பதக்கத்தை கத்தார் மற்றும் இத்தாலி வீரர்கள் பகிர்ந்து கொண்டு உள்ளனர்.

3 views

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி - காலிறுதியில் இந்திய மகளிர் அணி வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்திய மகளிர் அணி சாதனை படைத்து உள்ளது.

56 views

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் - தங்கம் வென்றார் ஸ்வெர்வ்

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெர்வ் தங்கப் பதக்கம் வென்றார்.

4 views

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் - இந்திய வீராங்கனை டூட்டி சந்த் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் தோல்வியை தழுவினார்.

22 views

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி; "மகளிர் அணி வரலாறு படைத்தது" - மத்திய அமைச்சர் பெருமிதம்

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

12 views

சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி - களம் இறங்கும் ரபேல் நடால்

வாஷிங்டனில் நடைபெற்று வரும் சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில், ரபேல் நடால், தனது தற்காலிக ஓய்வுக்குபின் மீண்டும் களம் இறங்குகிறார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.