"நடிகர் விஜய்-க்கு துணையாக நிற்பேன்" - சீமான்
பதிவு : ஜூலை 15, 2021, 04:36 PM
மாற்றம் : ஜூலை 15, 2021, 04:40 PM
அவதூறு பரப்புரைகளில் இருந்தும் மறைமுக அழுத்தங்களில் இருந்தும் நடிகர் விஜய் மீண்டு வர, அவருக்குத் துணை நிற்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.
அவதூறு பரப்புரைகளில் இருந்தும் மறைமுக அழுத்தங்களில் இருந்தும் நடிகர் விஜய் மீண்டு வர, அவருக்குத் துணை நிற்பதாக சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2012ம் ஆண்டு நடிகர் விஜய் வாங்கிய காருக்கு, நுழைவு வரி மிக அதிகமாக இருப்பதை உணர்ந்ததால், அவர் வரி விலக்கு அளிக்க வேண்டி நீதிமன்றத்தை நாடியது எவ்வகையிலும் தவறாகாது என்று கூறியுள்ளார். மேலும் அவர் வரி ஏய்ப்பு செய்யவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், நுழைவு வரிக்கு விலக்குக்கேட்பதும், அளிக்கப்படுவதும் புதிதல்ல என்றும் தெரிவித்தார். மேலும், வரி என்பது மக்களிடமிருந்து பறிக்கும் வழிப்பறிக் கொள்ளையாய் இருக்கக் கூடாது என்றும் கண்டனம் தெரிவித்தார். அத்துடன் அரசாங்கத்தை ஏமாற்ற நினைப்பவர்கள் நீதிமன்றத்தை நாட மாட்டார்கள் என்ற அடிப்படை உண்மையைக் கூட உணராமல், வழக்கு தொடர்ந்த ஒரே காரணத்திற்காக அவரை குற்றவாளியைப் போல் சித்தரிப்பது நியாயமில்லை என்று கூறியுள்ளார். அத்துடன், கடந்த காலங்களில் திரைப்படங்களில் மத்திய அரசின் ஆட்சி முறையைச் சாடியதற்காக அவரைப் பழி வாங்கத் துடிப்பது மிகவும் மலிவான அரசியல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

தமிழகத்தி்ல் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், முக்கிய அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

14 views

சட்டப்பேரவையில் கருணாநிதி படம் திறப்புவிழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவையில் கருணாநிதியின் படம் திறக்கும் விழாவின் ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

10 views

வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்கள் - முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைப்பு

வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து இன்று திறந்து வைத்தார்.

25 views

"அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு செய்வதில்லை" - பாஜக தலைவர் அண்ணாமலை

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக கூறுவது உண்மையில்லை என்று, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

80 views

கோயில் இடங்கள் ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சங்கரன்கோவில், செல்லியம்மன் சூலப் பிடாரியம்மன் கோயில் ஆக்கிரமிப்பை அகற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

12 views

விஜய் காருக்கான நுழைவு வரி - சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

நடிகர் விஜய் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு கோரிய வழக்கில், ஒரு லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.