கண்ணாடிகள் அகற்றப்படுவதற்கு எதிரான வழக்கு - போக்குவரத்து துறை ஆணையருக்கு புதிய உத்தரவு
பதிவு : ஜூலை 15, 2021, 04:03 PM
இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகளை அகற்றினால் வாரண்டி கிடையாது என நுகர்வோரை எச்சரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகளை அகற்றினால் வாரண்டி கிடையாது என நுகர்வோரை எச்சரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பின்னால் வரும் வாகனங்களை கண்காணித்து வாகனங்கள் இயக்க ஏதுவாக இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன.

ஆனால், இந்த கண்ணாடிகள் அகற்றப்படுவதாகவும், அதனால் விபத்துக்கள் அதிகரிப்பதாகவும் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழ்நாடு மாநில மோட்டார் வாகன சட்டப்படி, கண்ணாடி இல்லாமல் இரு சக்கர வாகனங்கள் இயக்குவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகள் பொருத்த வேண்டும் என்ற விதியை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இருசக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடியை அகற்றினால் வாரண்டி கிடையாது என நுகர்வோரை எச்சரிக்கும்படி, வாகன விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தேவை ஏற்பட்டால் இதுசம்பந்தமாக  வாரண்டி விதிகளை உருவாக்க வாகன உற்பத்தியாளர்களையும் அறிவுறுத்தலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

172 views

சொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.

46 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

35 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

17 views

பிற செய்திகள்

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

தமிழகத்தி்ல் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், முக்கிய அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

15 views

சட்டப்பேரவையில் கருணாநிதி படம் திறப்புவிழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவையில் கருணாநிதியின் படம் திறக்கும் விழாவின் ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

10 views

வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்கள் - முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைப்பு

வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து இன்று திறந்து வைத்தார்.

25 views

"அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு செய்வதில்லை" - பாஜக தலைவர் அண்ணாமலை

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக கூறுவது உண்மையில்லை என்று, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

80 views

கோயில் இடங்கள் ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சங்கரன்கோவில், செல்லியம்மன் சூலப் பிடாரியம்மன் கோயில் ஆக்கிரமிப்பை அகற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

12 views

விஜய் காருக்கான நுழைவு வரி - சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

நடிகர் விஜய் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு கோரிய வழக்கில், ஒரு லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.