சர்க்கரை நோயை கண்டறியும் புதிய கருவி - ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் சாதனை
பதிவு : ஜூலை 15, 2021, 12:25 PM
மாற்றம் : ஜூலை 15, 2021, 04:48 PM
வீடு, வீடாக சென்று சர்க்கரை பரிசோதனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கவுள்ள நிலையில், உமிழ் நீர் மூலம் சர்க்கரை நோய் கண்டறியும் புதிய தொழில்நுட்பம் பற்றி பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றால் உயிரிழக்கின்றனர். இந்த இறப்பு விகிதத்தை பாதியாகக் குறைக்கும் வகையில், பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று பரிசோதனை செய்யும் திட்டத்தை, தமிழக அரசு அறிமுகம் செய்திருக்கிறது.

இதன்படி, வீடுவீடாக செல்லும் சுகாதாரப் பணியாளர்கள், பரிசோதனை மேற்கொள்வதோடு, பாதிப்பு கண்டறியப்படுபவர்களுக்கு உடனடி மருத்துவ உதவிகளையும் வழங்குவார்கள் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

தவிர, வீட்டிலேயே சர்க்கரை பரிசோதனை செய்துகொள்ளும் கருவிகளையும் நீரிழிவு நோயாளிகள் பலர் பயன்படுத்தி வருகின்றனர். பொதுவாக இந்தப் பரிசோதனையின் போது, பாதிக்கப்பட்டவரின் விரலில் ஊசியால் குத்தி, அதில் வரும் ரத்தத்தின் மூலமே சோதனை செய்து முடிவுகளை பெறுவது இதுவரை வழக்கமாக இருக்கிறது.

இதற்கு மாற்றாக, எந்தவித காயமும், வலியும் இல்லாமல் பரிசோதனை மேற்கொள்ளும் முறையை, ஆஸ்திரேலியாவின் நியூ கேஸ்டில் New Castle பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பட்டையை, நாக்கில் வைத்த சில நிமிடங்களில், பரிசோதனை முடிவுகள் செல்போன் செயலிக்கு வந்தடையும்.

பிற செய்திகள்

"7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 views

தடுப்பூசி கோட்டாவில் மாற்றம் - மாநில அரசுகளுக்கு 75% தடுப்பூசி

தனியார் மருத்துவமனைகளுக்கான 25% சதவீத தடுப்பூசி கோட்டாவில் மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

3 views

பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் எங்கே? - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பக்தவத்சல பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 views

13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் - நிதியமைச்சர் பி.டி.ஆர் தாக்கல் செய்கிறார்

தமிழக பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

27 views

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கள் - "தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும்"

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார்.

12 views

"தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு" - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.