காரை தூக்கி பந்தாடிய யானை - காரின் நான்கு பக்கங்களும் உடைத்து சேதம்
பதிவு : ஜூலை 15, 2021, 11:52 AM
மாற்றம் : ஜூலை 15, 2021, 04:51 PM
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் ஒற்றை யானை பலமாக தாக்கியதில் கார் முற்றிலும் சேதமானது.
ஈரோடு மாவட்டம், பர்கூர் அருகே கொங்காடை குடியிருப்பு பகுதிக்கு ஒற்றையானை நள்ளிரவில் வந்துள்ளது. அருக்காணி என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டின் முன்பகுதியை இடித்து சேதப்படுத்தியது. வீட்டில் இருந்த அரிசி உள்ளிட்ட பொருட்களையும் சூறையாடியது. அதே பகுதியில் முத்துலட்சுமி என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரினை தும்பிக்கையால் தூக்கி பந்தாடியது. காரின் அனைத்து பக்கத்திலும் யானை பலமாக தாக்கியதில், காரினை இயக்க முடியாத அளவுக்கு சேதமாகியுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் வனவிலங்குகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பிற செய்திகள்

13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் - நிதியமைச்சர் பி.டி.ஆர் தாக்கல் செய்கிறார்

தமிழக பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

19 views

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கள் - "தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும்"

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார்.

12 views

"தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு" - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

16 views

அறநிலைத்துறையின் மூலம் கல்லூரிகள் விரைவில் கட்டப்படும் - அமைச்சர் சேகர்பாபு

அறநிலைத்துறையின் மூலம் கல்லூரிகள் விரைவில் கட்டப்படும் - அமைச்சர் சேகர்பாபு

19 views

நரம்பியல் மருத்துவர் கொலை வழக்கு : "குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள்" - தண்டனை விவரங்கள் பிற்பகல் அறிவிப்பு

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் ஒன்பது பேர் குற்றவாளிகள் என சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

24 views

வேறு சமூக சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டல் : சிறுமியை மிரட்டிய புகாரில் இளைஞர் கைது- சமூக மோதல் ஏற்படும் சூழல்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 17 வயது சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.