கன்வர் யாத்திரைக்கு அனுமதி - உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பதிவு : ஜூலை 15, 2021, 11:21 AM
கொரோனா காலத்தில் கன்வர் யாத்திரைக்கு அனுமதி வழங்கியிருக்கும் உத்தரபிரதேச அரசு, அது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது. இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது, இந்த தொகுப்பு...


கொரோனா காலத்தில் கன்வர் யாத்திரைக்கு அனுமதி வழங்கியிருக்கும் உத்தரபிரதேச அரசு, அது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது. இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது, இந்த தொகுப்பு... 

உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களை சேர்ந்த சிவ பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஹரிதுவார், கவுமுக், கங்கோத்ரி தலங்களுக்கு சென்று புனித நீர் எடுத்துவ ந்து தங்கள் ஊரிலிருக்கும் சிவாலயத்தில் அபிஷேகம் செய்வார்கள்.

கன்வர் யாத்திரை என அழைக்கப்படும் இந்த யாத்திரை கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

இவ்வாண்டு யாத்திரை காலம் நெருங்கும் நிலையில் உத்தரகாண்ட் அரசு யாத்திரையை ரத்து செய்வதாக அறிவித்தது.

ஆனால் உத்தரபிரதேச மாநில அரசு, வரும் 25 ஆம் தேதி யாத்திரை தொடங்கும் என அறிவித்துள்ளது. 

இதனால் குழப்பமடைந்த உத்தரகாண்ட் அரசு, நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டுவர முற்பட்ட போது, கும்பமேளாவில் தொற்று பரவியதை சுட்டிக்காட்டி எதிர்ப்புக்கள் எழவும் தடையை உறுதி செய்திருக்கிறது.

யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் 3-வது அலை ஏற்படும் என இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் உத்தரபிரதேச அரசு, யாத்திரைக்கு அனுமதி வழங்கியிருப்பது குறித்து நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியிருக்கிறது.  

கொரோனா 3-வது அலையை தடுக்க கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டுமென பிரதமர் வலியுறுத்திவரும் நிலையில், 

யாத்திரைக்கு அனுமதி வழங்கியிருப்பது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது எனக் கூறியிருக்கும் நீதிபதிகள்,

அரசுக்களின் நிலைப்பாட்டை நாங்கள் அறிய விரும்புகிறோம் எனக் கூறியுள்ளனர்.

கொரோனா காலத்தில் கன்வர் யாத்திரைக்கு அனுமதி வழங்கியிருக்கும் உத்தரபிரதேச அரசை பதிலளிக்க கோரி நோட்டீஸ் விடுத்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

மத்திய அரசும், உத்தரகாண்ட் மாநில அரசும் பதிலளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

171 views

சொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.

46 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

35 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

17 views

பிற செய்திகள்

"இளைஞர்களின் கனவு நாயகன்" அப்துல் கலாம் நினைவு தினம்

மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும், இளைஞர்களின் கனவு நாயகனுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

5 views

கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

34 views

காலம் போற்றும் அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாள் இன்று... திறமைக்கு வசதி வாய்ப்பு ஒரு பொருட்டல்ல என்று நிரூபித்த இளைஞர்களின் எழுச்சி நாயகனைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

14 views

100 நாள் வேலைத் திட்டம் : "வேலை நாட்களை அதிகரிக்கும் திட்டம் இல்லை" - மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி

மகாத்மா காந்தியின் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை நாட்களை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிடவில்லை என மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

10 views

காவிரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டம் : வைகோ கேள்விக்கு மத்திய அரசு பதில்

தமிழக அரசு கோரிக்கை வைத்த நிலையில், காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக, எம்.பி. வைகோவின் கேள்விக்கு மத்திய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

19 views

மனித கழிவுகளை மனிதனே அள்ளும் தடை சட்டம் - மக்களவை உறுப்பினர்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அமைச்சர்

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் பழக்கம் குறித்து மக்களவை உறுப்பினர்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.