ரயிலில் தவற விடப்பட்ட நகைப்பை - உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்
பதிவு : ஜூலை 15, 2021, 11:12 AM
மாற்றம் : ஜூலை 15, 2021, 04:54 PM
சென்னையில், தவற விட்ட நகைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் பணியில் ஈட்பட்டிருந்தனர். தாம்பரத்திலிருந்து சென்னை நோக்கி வந்த ரயிலில், 30 நிமிடங்களுக்கு மேலாக அனாதையாகக் கிடந்த பையை சோதனை செய்த போது, அதில் 20 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்டவை இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் பையைத் தவற விட்டது நங்கநல்லூர் பகுதியிலிருந்து ரயிலேறிய ஜனகேஸ்வரி மற்றும் அவரது கணவர் லட்சுமணன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்கள் சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் புகார் அளிக்கவே, புகாரின் அடிப்படையில் 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பொருட்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன. 

பிற செய்திகள்

"7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6 views

தடுப்பூசி கோட்டாவில் மாற்றம் - மாநில அரசுகளுக்கு 75% தடுப்பூசி

தனியார் மருத்துவமனைகளுக்கான 25% சதவீத தடுப்பூசி கோட்டாவில் மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

5 views

பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் எங்கே? - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பக்தவத்சல பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 views

13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் - நிதியமைச்சர் பி.டி.ஆர் தாக்கல் செய்கிறார்

தமிழக பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

31 views

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கள் - "தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும்"

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார்.

13 views

"தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு" - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.