தொழிலதிபரை கடத்தி சொத்துகள் அபகரிப்பு - மூளையாக செயல்பட்ட கோடம்பாக்கம் ஸ்ரீ
பதிவு : ஜூலை 15, 2021, 10:31 AM
மாற்றம் : ஜூலை 15, 2021, 04:57 PM
தொழிலதிபரை கடத்தி சொத்துகளை அபகரித்த விவகாரத்தில் கோடம்பாக்கம் ஸ்ரீ மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது...
சென்னை அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். தொழிலதிபரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த சிலருக்கும் சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக 2019-ம் ஆண்டு ராஜேஷை கைது செய்த திருமங்கலம் போலீசார் செங்குன்றம் அருகே உள்ள பண்ணை வீட்டில் அடைத்து வைத்து அவரையும், அவரது தாயாரையும் மிரட்டி சொத்துக்களை எழுதி வாங்கி பத்திரப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் திருமங்கலம் உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், காவலர்கள் மற்றும் அனைத்திந்திய இந்து மகா சபா சபை கட்சியின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ உள்பட 10 பேர் சிக்கினர். இதையடுத்து 10 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

இதனையடுத்து உதவி ஆணையர் உள்ளிட்ட போலீசார் 6 பேரும் தலைமறைவானது தெரியவந்தது. ஆனால் இதில் முக்கிய குற்றவாளியான கோடம்பாக்கம் ஸ்ரீ, கானத்தூரில் வைத்து கைது செய்யப்பட்டார். 

அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில், ராஜேஷை கடத்திய விவகாரத்தின் பின்னணியில் சீனிவாசராவ் என்பவர் இருப்பதும், 
இதற்காக பாஜகவை சேர்ந்த ஒருவர் மூலம், கோடம்பாக்கம் ஸ்ரீயின் உதவியை அவர் நாடியதும் தெரியவந்தது.  

தொழிலதிபர் ராஜேஷிடம் இருந்து சொத்துக்களை அபகரித்து சீனிவாசராவிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளார் கோடம்பாக்கம் ஸ்ரீ. 
இதற்காக உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன் மற்றும் உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட காவலர்களையும், ரவுடிகளையும் கூட்டாக சேர்த்து தொழிலதிபரை கடத்தி சொத்துக்களை எழுதி வாங்கியது தெரியவந்தது. 

குறிப்பாக பண்ணை வீடு ஒன்றில் ராஜேஷின் தாயை தனியாகவும், மனைவியை தனி அறையில் வைத்தும் மிரட்டி சொத்துக்களை வாங்கியுள்ளனர். தாய்க்கு உணவு தராமல் பட்டினி போட்டு சாகடித்து விடுவோம்  என்றும், மனைவியை பலாத்காரம் செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர். 

மனைவிக்கும், தாய்க்கும் ஏதாவது நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் தனது சொத்துக்களை ராஜேஷ் எழுதிக் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு மிரட்டி சொத்துக்களை வாங்குவதற்கு சீனிவாசராவ் மூலம் கோடம்பாக்கம் ஸ்ரீ, லட்சக்கணக்கில் பணத்தை காவல்துறை அதிகாரிகளுக்கு அள்ளி கொடுத்ததும் விசாரணையில் வெளிவந்தது. 

ஏற்கனவே கோடம்பாக்கம் ஸ்ரீ மீது, அவர் நடத்தி வரும் அனைத்திந்திய இந்து மகாசபையின் மாநில மகளிர் அணி செயலாளர் பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். மேலும் சென்னையில் விமல் சந்தி என்ற தொழிலதிபரை மோசடி செய்த விவகாரத்திலும் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ளார். 

இப்போது கடத்தி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட கோடம்பாக்கம் ஸ்ரீயை ஆஜர்படுத்த முயன்ற போது அவரது ஆதரவாளர்கள் செய்தியாளர்கள் சிலரை தாக்கியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கோடம்பாக்கம் ஸ்ரீ மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வரும் நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்...

பிற செய்திகள்

ஆக்ரோஷமாக கொட்டித்தீர்த்த கனமழை - மிதக்கும் விவசாய நிலங்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள தேவாலா, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

16 views

இமாச்சலபிரதேசத்தில் நிலச்சரிவு.. நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெரிய அளவிலான நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

25 views

பொறியியல் சேர்க்கை - அட்டவணை வெளீயீடு "நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்"

பொறியியல் சேர்க்கை - அட்டவணை வெளீயீடு "நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்"

28 views

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

29 views

ரூ.21 செலவில் 120 கி.மீ பயணிக்கும் கார்..! - தமிழரின் அசத்தல் கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் குறைந்த செலவில் பேட்டரியில் இயங்கும் காரை வடிவமைத்து பொறியாளர் ஒருவர் கவனத்தை ஈர்த்துள்ளார்.

32 views

டார்லிங் பர்னிச்சர் 100வது கிளை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் டார்லிங் பர்னிச்சர் கடையின் 100ஆவது கிளை திருவாரூரில் திறக்கப்பட்டுள்ளது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.