கூகுளுக்கு ரூ. 4,400 கோடி அபராதம்... தினசரி ரூ. 7.93 கோடி அபராத எச்சரிக்கை - காரணம் என்ன...?
பதிவு : ஜூலை 15, 2021, 10:29 AM
பிரான்சில் கூகுள் நிறுவனத்திற்கு 4 ஆயிரத்து 400 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன...?
பிரான்சில் கூகுள் நிறுவனத்திற்கு 4 ஆயிரத்து 400 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன...?   

இன்றைய இணைய உலகில் கூகுள், பேஸ்புக் போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வணிகம், விளம்பரம் தளத்தில் பலமிக்கவையாக உள்ளன.

 

இந்நிறுவனங்கள் தங்கள் தளங்களில் பகிரும் செய்தி இணைப்புகள் வாயிலாக விளம்பர வருவாய் ஈட்டினாலும், கோடி கணக்கில் செலவிட்டு உண்மை தகவலை வழங்கும் செய்தி நிறுவனங்களுக்கு பகிர்வது கிடையாது என்ற குற்றச்சாட்டு பரவலாக நிலவுகிறது.

 

இதுபோன்ற நிலையை களைய ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆஸ்திரேலியாவில் புதிய டிஜிட்டல் சட்ட விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

 
கூகுள் நிறுவனம் பதிப்புரிமை பெற்ற செய்திகளை பிரசுரிப்பதற்கு செய்தி நிறுவனங்களுக்கு உரிய சன்மானத்தை வழங்க ஐரோப்பிய யூனியனின் சட்ட விதிகள் வழிவகை செய்திருக்கிறது.

 

ஐரோப்பிய யூனியனின் கடுமையான சட்ட விதிகளின்படி கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் இசைக்கலைஞர்கள், செய்தி வெளியீட்டாளர்கள், செய்தியாளர்களின் படைப்பை வெளியிட அவர்களுடன் ஒப்பந்தம் செய்துக் கொள்ள வேண்டும்.

 

இந்நிலையில் கூகுள் நிறுவனம் சரிவர செயல்படவில்லை, உரிய சன்மானத்தை வழங்க தவறிவிட்டது என பிரான்ஸ் ஒழுங்கு முறை ஆணையத்திடம் செய்தி நிறுவனங்கள் புகார் தெரிவித்துள்ளன.

 

இதுதொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொண்டு தீர்வு எட்ட ஆணையம் கேட்டும், கூகுள் நிறுவனம் உடன்பாட்டுக்கு வரவில்லை என செய்தி நிறுவனங்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

 

இதனையடுத்து பதிப்புரிமை பெற்ற செய்திகளை வெளியிட சன்மானத்தை வழங்க தவறிவிட்டதாக கூறி 4 ஆயிரத்து 400 கோடி ரூபாயை அபராதமாக ஆணையம் விதித்து உள்ளது.

 

இழப்பீடு எவ்வாறு வழங்கப்படும் என்பது குறித்த பரிந்துரையை 2 மாதங்களுக்குள் வழங்க தவறும்பட்சத்தில், 

 

நாளொன்றுக்கு 7 கோடியே 93 லட்சம் ரூபாய் கூடுதலாக அபராதம் செலுத்த வேண்டும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது. 

 

ஆணையத்தின் இம்முடிவால் அதிருப்தி அடைந்திருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

171 views

ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 - கமலை தொடர்ந்து சூர்யாவும் எதிர்ப்பு

ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு, கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் செயல் என நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

121 views

சொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.

46 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

35 views

மும்பையில் தொடரும் கனமழை - மரைன் டிரைவ் பகுதியில் கடல் சீற்றம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

29 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

15 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ருசிகரம் - காதலை வெளிப்படுத்திய பயிற்சியாளர்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அர்ஜென்டினா வாள் வீச்சு வீராங்கனையிடம் அவரின் பயிற்சியாளர் காதலை வெளிப்படுத்திய ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.

12 views

ஜப்பானை சீண்டும் தென் கொரியா - டோக்கியோவில் தென்கொரியா தனி உணவகம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் தங்கள் நாட்டு வீரர்களுக்காக பிரத்யேகமாக உணவு தயாரித்து வழங்குகிறது தென்கொரியா.

14 views

அமெரிக்கா: பல்வேறு இடங்களில் பெய்த திடீர் மழை : தத்தளித்தபடி சென்ற கார்கள்

அமெரிக்காவின் உடா மாகாணத்தில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டது.

9 views

சீனா : கடுமையான மணற்புயல்... காணாமல் போன நகரம்...

சீனாவின் துன்ஹாங் நகரை கடுமையான மணற்புயல் ஆட்கொண்டது.

13 views

கொரிய விடுதலைப் போரின் நினைவு விழா: கிம் ஜாங் உன் போர் தியாகிகளுக்கு மரியாதை

கொரிய விடுதலைப் போர் 1950ஆம் ஆண்டு தொடங்கி 1953ஆம் ஆண்டு நிறைவடைந்து.

8 views

சர்வதேச கொரோனா பாதிப்பு நிலவரம் - 19.53 கோடியை கடந்தது பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 கோடியே 53 லட்சத்தை கடந்துள்ளது.

146 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.