ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கும் பிரபலங்கள்
பதிவு : ஜூலை 15, 2021, 10:27 AM
ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கும் பிரபலங்கள் பற்றிய சுவாரஸ்ய தொகுப்பை பார்க்கலாம்.
ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கும் பிரபலங்கள் பற்றிய சுவாரஸ்ய தொகுப்பை பார்க்கலாம்.

இங்கிலாந்தில் 1905 ஆம் ஆண்டு முதன் முதலில் தயாரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், ஒரு பந்தயத்தில் கலந்து கொண்டதன் மூலம் உலகளவில் பிரபலமானது. அழகும், கம்பீரமும், வேகமும் நிறைந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருப்பதே கவுரவம்
என்ற நிலை உருவானது.

ஒவ்வொரு வாடிக்கையாளரின் விருப்பத்திற்கும், எண்ண ஓட்டத்திற்கும் ஏற்றவாறு, ஒவ்வொரு காரையும் ரோல்ஸ்ராய்ஸ் தனித்துவத்துடன் தயாரித்து கொடுக்கிறது. இதனை ஆங்கிலத்தில் 'Bespoke' கார் மாடல்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வாங்குவதை பிரபலங்கள் அதிகம் விரும்புகின்றனர். விருது வழங்கும் நிகழ்ச்சிகள் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் போது பிரபலங்கள் இந்த காரில் வந்து இறங்குவதை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்.

அமிதாப் பச்சன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார்களையே பயன்படுத்துகின்றனர்.

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் "கோஸ்ட்" ரக கார் வைத்திருக்கிறார். இந்த காருக்கான வரி செலுத்தும் விவகாரம்தான் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.

பிரம்மாண்ட இயக்குனர் என்றழைக்கப்படும் இயக்குனர் சங்கரின் காரும் பிரம்மாண்டம்தான். தமிழகத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்  காரை முதலில் வாங்கியவர் என்ற பெருமைக்குரியவர் இவர்.

பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான தனுஷ் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கார் பயன்படுத்துகிறார்.

பிரபல நகைச்சுவை  நடிகர் சந்தானமும், ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருப்பவர்களின் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

192 views

சொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.

72 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

58 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

26 views

பிற செய்திகள்

பரவலாகி வரும் கிரீன் இந்தியா சேலஞ்ச் - சவாலை ஏற்றுக்கொண்ட நடிகர் அமிதாப் பச்சான்

தென்னிந்தியாவில் மரக்கன்று நட்டு வைக்கும் 'கிரீன் இந்தியா சேலஞ்ச்' பரவி வருகிறது. இதன்படி ஒருவர் மரக்கன்று நட்டு இன்னொருவரை மரக்கன்று நடும்படி சவால் விட வேண்டும்.

11 views

ஆபாச படங்கள் எடுத்த வழக்கு - ராஜ் குந்த்ராவிற்கு 14 நாள் நீதிமன்ற காவல்

ஆபாச படங்கள் எடுத்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ள நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

21 views

தனுஷின் "மாறன்"- ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 43 ஆவது படத்திற்கு "மாறன்" என பெயரிடப்பட்டுள்ளது.

116 views

பிறந்தநாள் கொண்டாடும் தனுஷ் - துள்ளுவதோ இளமை முதல் ஹாலிவுட் வரை

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார்.

46 views

விஜய் காருக்கான நுழைவு வரி - சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

நடிகர் விஜய் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு கோரிய வழக்கில், ஒரு லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

35 views

ஹிப் ஹாப் தமிழா ஆதி யூடியூப் சேனல் முடக்கம் - வீடியோக்களை அழித்த ஹேக்கர்கள்

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனலை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.