அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சர் பேட்டி
பதிவு : ஜூலை 14, 2021, 07:35 PM
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தெரிவித்தார். அதன்படி, மத்திய அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 11 சதவீதமாக 
அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தற்போது பெற்றுவரும் அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து  28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.முன்னதாக கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி, 4 சதவீத உயர்த்தப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வையும் கருத்தில் கொண்டு, இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி  முதல் இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரையிலான நிலுவையில் உள்ள கால கட்டத்திற்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாது எனவும் மேற்கண்ட காலகட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

224 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

190 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

121 views

பிற செய்திகள்

பெகாசஸ் - செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் - பெகாசஸ் மென்பொருள் செயல்படுவது எப்படி?

உலகம் முழுவதுமே செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறி, இந்திய நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. எப்படி செயல்படுகிறது இந்த மென்பொருள் என்பதை பாருங்கள்...

0 views

மகாராஷ்டிராவில் இடைவிடாது கனமழை - ஜூலை மாதத்திற்கான மழை பதிவு

மகாராஷ்டிராவில் கடந்த 40 ஆண்டு கால வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஜூலை மாதத்தில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது... இடைவிடாத மழையால் தத்தளித்து வரும் பகுதிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

6 views

இமாச்சலில், ஆகஸ்ட்-2.ல் பள்ளிகள் திறப்பு - 10-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு

இமாச்சல் பிரதேசத்தில், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் 2ஆம் தேதி பள்ளிகளை திறக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

6 views

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தபேருந்து - சாமார்த்தியமாக ஓரமாக நிறுத்திய ஓட்டுநர்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.

10 views

சுற்றுலா பயணிகளை வரவேற்கும் நாடுகள் - இந்தியர்களுக்கு விசா வழங்கும் நாடுகள்

கொரோனா பரவலின் இரண்டாவது அலை இந்தியாவில் குறைந்துள்ள நிலையில், இந்தியர்களை சுற்றுலா மற்றும் வர்த்தக பணிகளுக்கு வரவேற்கும் நாடுகள் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்...

19 views

ட்ரோன் மூலம் பறந்து வந்த வெடிபொருட்கள் - சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை வீரர்கள்

காஸ்மீர் எல்லைப் பகுதியில், வெடிப் பொருட்களை ஏற்றி பறந்து வந்த ட்ரோன் ஒன்றை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.