"மீண்டும் கட்டுப்பாடுகளை அறிவிக்க உத்தரவு பிறப்பிப்பு" - மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்
பதிவு : ஜூலை 14, 2021, 07:04 PM
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் மீறுவோர் மீது உரிய சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாத இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகளை அறிவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து மற்றும் சந்தை பகுதிகளில் கூட்டத்தை ஒழுங்கு முறைப்படுத்தவும் நிறுவன மேலாண்மை பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாநில தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்காத மாநிலங்களில் நோய் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருப்பதாகவும் இது கவலை அளிக்கக் கூடிய விஷயம் என கடிதத்தில் அஜய் பல்லா குறிப்பிட்டுள்ளார்.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் விதிகளை மீறுவோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இரண்டாம் அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என கூறிய அவர், தடுப்பூசி துரிதமாக செலுத்தப்பட்டு வரும் நிலையில் எந்தவிதமான கவனக்குறைவுக்கும் இடமளித்து விடக்கூடாது கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

172 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

35 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

17 views

பிற செய்திகள்

"இளைஞர்களின் கனவு நாயகன்" அப்துல் கலாம் நினைவு தினம்

மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும், இளைஞர்களின் கனவு நாயகனுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

6 views

கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

34 views

காலம் போற்றும் அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாள் இன்று... திறமைக்கு வசதி வாய்ப்பு ஒரு பொருட்டல்ல என்று நிரூபித்த இளைஞர்களின் எழுச்சி நாயகனைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

14 views

100 நாள் வேலைத் திட்டம் : "வேலை நாட்களை அதிகரிக்கும் திட்டம் இல்லை" - மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி

மகாத்மா காந்தியின் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை நாட்களை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிடவில்லை என மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

10 views

காவிரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டம் : வைகோ கேள்விக்கு மத்திய அரசு பதில்

தமிழக அரசு கோரிக்கை வைத்த நிலையில், காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக, எம்.பி. வைகோவின் கேள்விக்கு மத்திய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

19 views

மனித கழிவுகளை மனிதனே அள்ளும் தடை சட்டம் - மக்களவை உறுப்பினர்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அமைச்சர்

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் பழக்கம் குறித்து மக்களவை உறுப்பினர்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.