தமிழகத்தில் 2021க்குள் அனைவருக்கும் தடுப்பூசி சாத்தியமா?
பதிவு : ஜூலை 14, 2021, 03:58 PM
தமிழகத்தில் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி சாத்தியமா..? தடுப்பூசி பங்கீட்டில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் என்ன என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
தமிழகத்தில் தடுப்பூசி தட்டுபாடு காணமாக நிறுத்தி வைக்கப்பட்ட தடுப்பூசி செலுத்துதல் பணி, 5 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் வந்ததும் மீண்டும் தொடங்கியிருக்கிறது. 

தமிழகத்திற்கு 12-ம் தேதி வரையில் ஒரு கோடியே 67 லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ள நிலையில், ஒரு கோடியே 66 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தை விட குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிகமான தடுப்பூசி சென்றிருக்கும் நிலையில், மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசியை வழங்க வேண்டும் என மத்திய அரசை  மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

உற்பத்தியில் 90 சதவீத டோஸ்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியிருப்பதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். பொதுமக்களும் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க கையிருப்பை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். 

அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த தமிழகத்தின் தேவை 11 கோடியே 12 லட்சம் டோஸ்களாக உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்த நிலையில் இந்த திட்டம் சாத்தியமாகுமா என்ற கேள்விகளும் எழுந்திருக்கிறது.


பிற செய்திகள்

மக்களை தேடி மருத்துவம் புதிய திட்டம் : 5 - ந் தேதி துவக்கி வைக்கிறார் முதல்வர்

ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் "மக்களை தேடி மருத்துவம்" எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 5 ம்தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைக்கிறார்.

13 views

தமிழகத்தில் மேலும் 1,756 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

11 views

ஓபிஎஸ், உதயநிதியின் வெற்றியை எதிர்த்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

26 views

குப்பையில் கலெக்டர் அலுவலக அரசு ஆவணங்கள் - அதிர்ச்சி

சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பல கோப்புகள் குப்பையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

23 views

சங்கரய்யாவிற்கு 'தகைசால் தமிழர்' விருது - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவராந சங்கரய்யாவிற்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

18 views

ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் பொன்முடி தகவல்

பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர, பிற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.