அரசியலில் குங்பூ போடுகிறாரா ஜாக்கிசான் - சீன கம்யூனிச கட்சியில் இணைய விருப்பம்
பதிவு : ஜூலை 14, 2021, 01:12 PM
சீன கம்யூனிச கட்சியில் இணைய விருப்பம், அரசியலில் குங்பூ போடுவாரா ஜாக்கிசான்...?
சீன கம்யூனிச கட்சியில் இணைய விருப்பம், அரசியலில் குங்பூ போடுவாரா ஜாக்கிசான்...?  பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.ஜாக்கிசான் சர்வதேச திரையுலகில் சாகச நாயகன்.80 தொடங்கி இன்றைய பதின்ம பருவ குழந்தைகளின் விருப்பத்திற்குரிய ஆக்‌ஷன் ஹீரோ.ஆகாயத்தில் பறக்கும் சண்டைக் காட்சிகளில் அவருடைய வேகம், அதனை காமெடியாகவே கொடுக்கும் அவருடைய அணுகுமுறை, வேடிக்கையான முகபாவனைகள் என அனைத்தும் அனைவரையும் ஈர்க்கும்...ஜாக்கிசான் பட குங்பூ, கராத்தே, திரிலிங்கான சண்டை காட்சிகள்ஆறு வயதிலேயே நாடக துறைக்குள் நுழைந்த  ஜாக்கிசான், இன்று உலக அளவில் அதிகம் சம்பளம் பெறும் நடிகர்களில் ஒருவர்...பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங்கில் 1954 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜாக்கிசான். 1997-க்கு பின்னர் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டுக்கு வந்த ஹாங்காங்கின் சிறப்புரிமைகளை எல்லாம் சீனா பறித்து வருகிறது. 2019 ஹாங்காங்கில் புதிய தேசிய பாதுகாப்புச்சட்டத்தை சீனா கொண்டுவந்த போது, ஜாக்கிசான் சீனாவே தன்னுடைய நாடு என்றார். இதனால் ஹாங்காங் மக்களிடையே வெறுப்பை சம்பாதித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி 100 ஆண்டுகள் ஆகும் நிலையில் சீனாவில் கொண்டாட்டம் களைக்கட்டியுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு சென்ற ஜாக்கிசான், சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய விரும்புவதாக கூறியிருக்கிறார்.தனது அறக்கட்டளைகள் மூலம் கல்வி, மருத்துவம் சார்ந்த உதவிகளை மக்களுக்கு வழங்கிவரும் ஜாக்கி சானுக்கு அரசியல் புதியதா என்றால் இல்லையென்றே சொல்லலாம்..ஆம் அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட ஆலோசனை குழுவில் இடம்பெற்று இருந்துள்ளார். ஹாங்காங்கில் புகைச்சல் இருந்துவரும் வேளையில், ராணுவ கட்டமைப்புடன் ஒரு குடையின் கீழ் இயங்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக விருப்பம் தெரிவித்து இருக்கிறார். அப்படியே அவர் இணைந்தாலும் அங்கு எந்தஒரு அரசியல் மாற்றமும் நிகழப்போது கிடையாது என்பதே சர்வதேச அரசியல் நோக்கர்களின் பார்வையாக இருக்கிறது.  

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

192 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

58 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

26 views

பிற செய்திகள்

அமெரிக்காவில் தொற்று பரவல் வேகம் - முகக்கவசம் அணிவதில் தளர்வு வாபஸ்

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா தொற்று வேகம் எடுத்திருக்கும் நிலையில், தடுப்பூசியை செலுத்தியோர் வைரசை பரப்பலாம் என்ற அச்சம் காரணமாக, முக கவசம் அணிவது அங்கு மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

12 views

அதிபர் படுகொலைக்கு நீதிகேட்டு போராட்டம் - வீதியில் புகைப்படம் வைத்து இறுதி சடங்கு

ஹைதி அதிபர் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

13 views

துருக்கி : கிடங்கில் ஏற்பட்ட தீயால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

துருக்கியின் காசியான்டெப் பகுதியில் இருக்கும் கிடங்கில் திடீரென பெரிய அளவில் தீப்பற்றி எரிந்தது.

11 views

பூனை உடல்நிலையை அறிய செயலி - "பூனை வளர்ப்பவர்களுக்கு முழு தகவல்"

பூனைகளின் மனநிலை குறித்து அறிய புதிய செல்போன் செயலியை கனடாவை சேர்ந்த குழு உருவாக்கியுள்ளது.

8 views

அதிவேகமாக சென்ற சிகப்பு நிற ஆடி கார் - சினிமா பாணியில் துரத்தி சென்று பிடித்த போலீசார்

அமெரிக்காவில் சந்தேகப்படியான நபரை சினிமா பாணியில் காரில் அதிவேகமாக துரத்தி சென்று போலீசார் கைது செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

18 views

சீனாவை பதம் பார்த்த பேரிடர்கள் - பல இடங்களில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

கொரோனா வைரஸ் உருவான சீனாவை இயற்கை பேரிடர்கள் பதம் பார்த்து வருகின்றன.

122 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.