ஆளுநர் மாளிகையில் உண்ணாவிரதத்தை தொடங்கினார் கேரள ஆளுநர் ஆரிப் முகமது
பதிவு : ஜூலை 14, 2021, 10:59 AM
கேரளாவில் பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக அம்மாநில ஆளுநர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
கேரளாவில் பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக அம்மாநில ஆளுநர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். கேரளாவில் சமீப காலமாக வரதட்சணை கொடுமைக்கு  ஏராளமான பெண்கள் பலியாகி வருகின்றனர். வரதட்சணை எதிர்ப்புக் குரல் தற்போது கேரளாவில் மேலோங்கி வரும் நிலையில், பெண்கள் மீதான வன்கொடுமைக்கு எதிராக காந்திய அமைப்பு சார்பில் கேரளா மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ஆளுநர் மாளிகையில் தனது உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார். மாலையில் திருவனந்தபுரம் காந்தி பவனில் நடைபெறும் காந்திய அமைப்பின் உண்ணாவிரத போராட்டத்தில் அவர் பங்கேற்கிறார். அத்துடன் தனது உண்ணாவிரத போராட்டத்தை ஆளுநர் ஆரிப் முகமது கான் நிறைவு செய்ய உள்ளார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில், பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

252 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

112 views

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை : வடசென்னையில் போதை மாத்திரை விற்பனை ஜரூர் - வடமாநிலம் டூ வடசென்னை தலைவன் கைது

வடசென்னையில் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

83 views

பிற செய்திகள்

உடைந்து விழுந்த மேல்தேக்க குடிநீர் தொட்டி - பாய்ந்தோடிய தண்ணீர்

குஜராத் மாநிலம் ஜூனாகாத் பகுதியில் உள்ள கிர்ஷாரா கிராமத்தில் 40 ஆண்டு பழமையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தது.

11 views

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - இரண்டு நாட்களுக்கு முழு ஊரடங்கு

கேரளாவில் 2 நாட்கள் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

95 views

மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்ற இளைஞர் - காதல் விவகாரத்தில் நடந்த பயங்கர​ம்

கேரளாவில் காதல் விவகாரத்தில் பல் மருத்துவ கல்லூரி மாணவியை கொடூரமாக சுட்டுக் கொன்ற இளைஞர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்....

212 views

காட்டாற்றில் அடித்து செல்லப்பட்ட பாலம் - ஏணி மூலம் ஆற்றை கடந்த அமைச்சர்

இமாச்சல பிரதேச அமைச்சர் ஒருவர் வெள்ள பாதிப்புகளை பார்வையிட காட்டாற்று வெள்ளத்தை கடந்து சென்றார்.

13 views

ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம் - ஸ்டெர்லைட் ஆலை நடவடிக்கை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதி முடிவடைந்ததையடுத்து ஆக்சிஜன் உற்பத்தியை தொழிற்சாலை நிர்வாகம் நிறுத்தியுள்ளது.

10 views

இமாச்சல பிரதேசத்தில் பெய்த தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு - முடங்கிய தேசிய நெடுஞ்சாலை

இமாச்சல பிரதேசம், சிர்மாவுர் மாவட்டத்தில் பெய்த கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.