கொரோனாவால் பறிபோன வாழ்வாதாரம் - வாழ்வாதாரத்திற்காக திருட்டில் இறங்கிய அவலம்
பதிவு : ஜூலை 14, 2021, 09:50 AM
கொரோனாவால் வாழ்வை இழந்து திருட்டு தொழிலில் இறங்கி 120 ரூபாயை திருடி மாட்டிக் கொண்ட 3 பேரை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
கொரோனாவால் வாழ்வை இழந்து திருட்டு தொழிலில் இறங்கி 120 ரூபாயை திருடி மாட்டிக் கொண்ட 3 பேரை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த அய்யலூர் பகுதியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. இவரின் நண்பர்கள் சந்திரசேகர் என்கிற கொத்தவரங்காய், மற்றும் சின்னன். 3 பேரும் ஒன்று சேர்ந்து மரங்களில் இருக்கும் தேனை எடுத்து அதனை விற்று பிழைப்பு நடத்துவது வழக்கம். ஆனால் கொரோனாவால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படவே, வறுமையில் தவித்து வந்தனர் 3 பேரும்... என்ன செய்வதென தெரியாமல் அவர்கள் தவித்து வந்தனர். இந்த நிலையில் குட்டம் பகுதியில் உள்ள வீட்டின் அருகே இருந்த மரத்தில் தேன் எடுக்க 3 பேரும் சென்றுள்ளனர். அப்போது அந்த வீடு பூட்டியிருப்பதை அறிந்த அவர்களுக்கு கொள்ளையடிக்கும் எண்ணம் உருவானது. இதற்காக திட்டமிட்ட அவர்கள், அன்றைய தினம் இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பீரோவை திறந்து பார்த்த  போது அதில் 120 ரூபாய் மற்றும் 13 கிராம் தங்கம் மட்டுமே இருந்தது. இதனை எடுத்துக் கொண்டு சென்ற அவர்கள் வழக்கம் போல தங்கள் வேலையை பார்த்தனர். இதனிடையே வீட்டின் உரிமையாளர் வந்து பார்த்த போது கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. ஆனால் பீரோவில் ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் நாலே முக்கால் சவரன் நகை இருந்ததாக உரிமையாளர் பொய் கணக்கு காட்டியுள்ளார். இதனிடையே போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்த போது கொள்ளையர்கள் சிக்கினர். அப்போது அவர்களிடம் நடந்த விசாரணையில் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். வெறும் 120 ரூபாய் மற்றும் 13 கிராம் தங்கம் மட்டுமே இருந்தததாகவும், அதனை மட்டுமே திருடியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 3 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

252 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

112 views

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை : வடசென்னையில் போதை மாத்திரை விற்பனை ஜரூர் - வடமாநிலம் டூ வடசென்னை தலைவன் கைது

வடசென்னையில் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

84 views

பிற செய்திகள்

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேர்ந்து வாழ வந்த மனைவி தற்கொலை - கணவரை கைது செய்ய வலியுறுத்தல்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவி மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ வந்த ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

0 views

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு துணை தேர்வு - ஹால்டிக்கெட் வெளியிட்டது தேர்வுத்துறை

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட், தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

8 views

"3-வது அலை வராமல் தடுப்போம்" - முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

தமிழக அரசு சார்பில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

20 views

சோதனையில் போலீசாரை தாக்க முயற்சி - கத்தியால் தாக்க வந்த இரு இளைஞர்கள் கைது

திண்டிவனம் அருகே வாகன சோதனையின் போது சப் இஸ்பெக்டரை கத்தியால் தாக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

10 views

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை - கொலைக்கான காரணம் குறித்து விசாரணை

காஞ்சிபுரம் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவரின் மரணம் குறித்து போலீசர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

93 views

மீண்டும் கொரோனா பரவல் எதிரொலி - சென்னையில் முக்கிய வணிக பகுதிகள் மூடல்

சென்னை மாநகரின் முக்கிய வணிக பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டுள்ளதா என மண்டல கண்காணிப்பு குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

181 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.