கொரோனா தடுப்பூசிகளை கலந்து அளிக்கலாமா? - செளமியா சுவாமிநாதன் எச்சரிக்கை
பதிவு : ஜூலை 14, 2021, 08:51 AM
கொரோனா தடுப்பூசிகளை கலந்து அளிப்பது பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தடுப்பூசிகளை கலந்து அளிப்பது பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதான் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தடுப்பூசி முதல் டோஸை ஒரு நிறுவனத்திடமும், இரண்டாவது டோஸை வேறு ஒரு நிறுவனத்திடமும் எடுத்துக் கொள்ளும் போக்கு உலகின் பல நாடுகளில் அதிகரித்துள்ளது. தடுப்பூசிகளை மாற்றி அளிப்பது பற்றி போதுமான ஆய்வு முடிவுகள், தரவுகள் இல்லாத நிலையில் இப்படி மாற்றி அளிப்பது ஆபத்தானது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். தற்போது முதல் டோஸ் அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசி அளித்த பின், இரண்டாவது டோஸாக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை அளிப்பது பற்றி மட்டுமே போதுமான தரவுகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய, கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸை செலுத்த  நான்கு உலக நாடுகள் திட்டமிட்டுள்ளது பற்றி குறிப்பிட்ட செளமியா சுவாமிநாதன், இது உலக அளவில் சம அளவில் தடுப்பூசி விநியோகிக்கப்படுவதை பாதிக்கும் என்று கவலை தெரிவித்துள்ளார். 
உலகில் உள்ள 11 பணக்கார நாடுகள் மூன்றாவது டோஸ் தடுப்பூசி அளிக்க முடிவு செய்தால், 80 கோடி தடுப்பூசிகள் கூடுதலாக தேவைப்படும் என்றும்,  மூன்றாவது டோஸ் கட்டாயம் தேவை என்பதற்கு இதுவரை விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

248 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

199 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

132 views

பிற செய்திகள்

"சிறுவர்களிடம் கோவேக்சின் தடுப்பூசி சோதனை" - எய்ம்ஸ் நிறுவன தலைவர் தகவல்

"சிறுவர்களிடம் கோவேக்சின் தடுப்பூசி சோதனை" - எய்ம்ஸ் நிறுவன தலைவர் தகவல்

10 views

தென்மேற்கு பருவமழை தீவிரம் - 54 கிராமங்களில் சூழ்ந்த மழைநீர்

தென்மேற்கு பருவமழை தீவரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன..

8 views

ஜேஇஇ முதன்மை தேர்வு 2021 - மகாராஷ்டிரா மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு

ஜேஇஇ முதன்மை தேர்வு எழுத முடியாத மகாராஷ்டிரா மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

6 views

இரண்டு குழந்தைகள் கொள்கை திட்டம் - மத்திய அரசு விளக்கம்

நாடு முழுவதும் இரண்டு குழந்தைகள் கொள்கையை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

16 views

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சானு - வெற்றியை கொண்டாடிய குடும்பத்தினர்

இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள நிலையில், அவரது வெற்றியை சொந்த ஊரில் அவரது குடும்பத்தினர் கொண்டாடினர்.

21 views

இன்றும் நாளையும் முழு ஊரடங்கு அமல் - பாதுகாப்புப் பணியில் போலீசார்

கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் இன்றும் நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.