ரூ. 250 கோடி டெண்டர்கள் ரத்து - சென்னை மாநகராட்சி அடுத்தடுத்து அதிரடி
பதிவு : ஜூலை 14, 2021, 07:24 AM
கடந்த ஒரு வாரத்தில் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை சென்னை மாநகராட்சி ரத்து செய்திருக்கிறது. இதன் பின்னணி குறித்து பார்க்கலாம்..
கடந்த ஒரு வாரத்தில் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை சென்னை மாநகராட்சி ரத்து செய்திருக்கிறது. இதன் பின்னணி குறித்து பார்க்கலாம்..தலைநகர் சென்னையை சீரமைக்கும் வகையில், சாலை மேம்பாடு, பூங்காக்கள் மற்றும் மழைநீர் வடிகால் புனரமைப்பு போன்ற பல்வேறு பணிகளை, ஒப்பந்ததாரர்களிடம் வழங்கி இருக்கிறது சென்னை மாநகராட்சி. டெண்டர் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என தொடர் புகார்கள் எழுந்த நிலையில், ஒப்பந்தப் பணிகளை மாநகராட்சி தரப்பு அதிரடியாக ஆய்வு செய்தது. அடையாறு, அண்ணாநகர், கோடம்பாக்கம், ராயபுரம் உள்ளிட்ட 43 பகுதிகளில், மழைநீர் வடிகால்களை சீரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளுக்காக, பிப்ரவரி மாதம் 120 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் விடப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கிறது சென்னை மாநகராட்சி.இதேபோல், 15 மண்டலங்களில் 120 கோடி ரூபாய் மதிப்பில், ஆயிரத்து 500 ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்க விடப்பட்ட ஒப்பந்தமும் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின் சமூக வலைதள பக்கங்களை பராமரிக்க, 2 கோடி மதிப்பீட்டில் விடப்பட்ட ஒப்பந்தமும் ரத்தாகி உள்ளது.இப்படி, ஒரே வாரத்தில் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளை சென்னை மாநகராட்சி அதிரடியாக ரத்து செய்திருக்கும்நிலையில், ஒப்பந்தப் பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

224 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

190 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

121 views

பிற செய்திகள்

கும்பாபிஷேகம் செய்யப்படாத கோவில்கள் "விரைவில் குடமுழுக்கு செய்யப்படும்" - அமைச்சர் சேகர்பாபு

கோவில் நிலங்களைத் தெரியாமல் கிரயம் செய்து வைத்திருந்தாலும் தவறுதான் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

8 views

வடிவேலு பட பாணியில் நிஜ சம்பவம் - நண்பனை அடகு வைத்துவிட்டு திருட்டு

வடிவேலு பட பாணியில் நண்பனை அடமானம் வைத்து விட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற சம்பவம் நாமக்கல் அருகே அரங்கேறி இருக்கிறது....

10 views

ஆடி முதல் வெள்ளியையொட்டி தமிழகத்தின் பல்வேறு அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையில் அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

27 views

அதிமுக 28-ந்தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் வரும் 28 ம் தேதி அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்து உள்ளனர்.

22 views

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 67 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்பு

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67 லட்சத்திற்கும் அதிகமானோர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

3231 views

புதிய துணைவேந்தர்கள் நியமனம் - குடியரசு தலைவர் உத்தரவு

12 மத்திய பல்கலைக்கழகங்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புதிய துணைவேந்தர்களை நியமனம் செய்துள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.