நெருங்கி வரும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் - ராகுல் காந்தி-பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு
பதிவு : ஜூலை 14, 2021, 02:14 AM
ராகுல் காந்தி மற்றும் பிரஷாந்த் கிஷோரின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோரும் சந்தித்து பேசினர். டெல்லியில் உள்ள ராகுல் காந்தி இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோரும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தி, பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு என்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்தும் பெற்றுள்ளது. அண்மையில் சரத் பவார், மம்தா பானர்ஜி உள்ளிட்டோரையும் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.